Jun 7, 2024
ஹார்மோன் மாற்றங்களால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு முகத்தில் ஏற்பட்டு கன்னங்கள், தாடை பகுதிகளில் முகப்பருக்களை சந்திக்க நேரிடலாம்.
Image Source: pexels-com
சிலருக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முகப்பருக்கள் தோன்றும். இதனாலும் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முகப்பரு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
Image Source: istock
ஹார்மோன் முகப்பருக்கள் மிக ஆழமாக தோன்றக்கூடியது. இவை வலி மிகுந்தவை. எண்ணெய் மற்றும் அழற்சியின் காரணமாக முகப்பருக்கள் அதிகரிக்கும்.
Image Source: istock
மன அழுத்தம் முகப்பருக்கள் தோன்ற மற்றொரு காரணியாக மாறுகிறது. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் மற்ற ஹார்மோனை சிதைப்பதால் முகப்பருக்களை தூண்டுகிறது.
Image Source: istock
கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்டுகள் சரும துளைகளை எண்ணெய்கள் அடைப்பதை தடுக்கின்றன. சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைக்கோலிக் அமிலம் போன்ற முகப்பருக்களை நிர்வகிக்கும் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம்.
Image Source: istock
லேசான முதல் மிதமான முகப்பருவிற்கு ரெட்டினாய்டுகள் உதவுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்கி முகப்பருக்கள் அடைப்பதை தடுக்கிறது.
Image Source: istock
கார்டிசோலுக்கும் முகப்பருவிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனவே மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். நினைவாற்றல், யோகா மற்றும் போதுமான தூக்கம் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
Image Source: istock
சில அத்தியாவசிய எண்ணெய்கள் முகப்பருக்களை மோசமாக்கலாம். எனவே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
Image Source: istock
மென்மையான சுத்திகரிப்பு, சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்தல், காமெடோஜெனிக் அல்லாத பொருட்களை பயன்படுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களை செய்து வரலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏதேனும் இருந்தால் சரும மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!