Jul 15, 2024
முடிக்கு ஹேர் டை அடிக்கும் பொழுது கழுத்துப்பகுதி, காது, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அந்த டை கறையானது படியும்.
Image Source: istock
அப்படி படியும் கறைகளை நீக்குவது பெரும் சவாலான விஷயமாக பலருக்கும் உண்டு. அதற்கான சில எளிய டிப்ஸ்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Image Source: istock
சருமத்தில் படியும் ஹேர் டை கறைகள் இருக்கும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யை வைத்து நன்றாக தேய்த்தால் கறை அழிந்துவிடும்.
Image Source: istock
உணர்திறன் வாய்ந்த சருமம், தோல் அலர்ஜி, ஒவ்வாமை உள்ளிட்ட தொந்தரவு உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
Image Source: istock
பற்களை விலக்கும் பேஸ்ட் கொண்டு ஹேர் டை பட்ட இடத்தில் வைத்து தேய்த்து மசாஜ் செய்தால் டை அகன்று விடும்.
Image Source: istock
வீட்டில் ஆல்கஹால் இருக்கும் பட்சத்தில் அதனை ஒரு பஞ்சில் ஊற்றி டை படிந்த இடங்களில் வைத்து தேய்த்து எடுத்தால் டையின் கறை மறையும். ஆனால் இது சிலரது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
Image Source: istock
உங்களிடம் மேக்கப் ரிமூவர் இருந்தால் அதனை ஹேர் டை படிந்த இடத்தில் வைத்து தேய்த்தாலும் அந்த கறை நீங்கிடும்.
Image Source: istock
டை கறை படிந்த இடத்தில் ஆலிவ் எண்ணெய் கொண்டு நன்கு தேய்த்து, அப்பகுதியை வெதுவெதுப்பான நீரினை கொண்டு கழுவினால் கறை அகலும்.
Image Source: istock
தலைக்கு ஹேர் டை அடிப்பதற்கு முன்னர் காது, நெற்றி, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோலியம் ஜெல்லியை தேய்த்து கொள்ளுங்கள். இது உங்களது சருமத்தில் அடுக்கை ஏற்படுத்தி ஹேர் டை படிய விடாமல் தடுத்துவிடும்.
Image Source: pexels-com
Thanks For Reading!