ஹைவேயில் வைக்கப்பட்டுள்ள போர்டுகள் பச்சை நிறத்தில் இருக்க காரணம் என்ன ?
Nivetha
தேசிய நெடுஞ்சாலை
நமது தேசிய நெடுஞ்சாலைகளில் வழிகாட்டி பலகைகள் வைத்திருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம். அதில் ஊர்களின் பெயர் வெள்ளை நிறத்திலும் போர்டு பச்சை நிறத்திலும் இருக்கும்.
Image Source: pixabay
ஏன் ?
அந்த போர்டுகள் ஏன் பச்சை நிறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. வேறு வண்ணங்களில் கூட வைத்திருக்கலாமே என்று நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கான பதிலை தான் இப்பதிவில் நாம் தற்போது பார்க்க போகிறோம்.
Image Source: istock
பச்சை நிறம்
பச்சை நிறம் அமைதியான மற்றும் ஊடுருவாத வண்ணமாக கருதப்படுகிறது. இந்த நிறத்தில் பலகைகள் வைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறாது. அதனால் தான் இந்த நிறத்தில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
Image Source: istock
அமெரிக்காவின் ஆய்வு
இது குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பச்சை நிறம் சுற்றுப்புறத்தின் வண்ணத்தோடு சேர்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதற வாய்ப்பில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.
Image Source: pixabay
சிவப்பு நிற போர்டு
அதே சமயம் சில இடங்களில் சாலைகளில் சிவப்பு நிறத்திலும் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த பலகைகளில் தவறான பாதை, ஸ்டாப் போன்ற முக்கியமான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Image Source: pixabay
காரணம்
சிவப்பு நிறத்தில் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தால் வாகனம் ஓட்டுவதில் இருந்து வழிகாட்டி பலகை மீது கவனம் மாறும். அப்போது தான் முக்கிய தகவல்களை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள முடியும் என்பதாலே இந்நிறத்தில் பலகைகள் வைக்கப்படுகிறது.
Image Source: pixabay
தகவல்கள்
பச்சை நிற வழிகாட்டு பலகைகளில் இடங்களின் பெயர்கள், அதன் திசை மற்றும் தூரத்தின் அளவு கிலோ மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Image Source: pexels
எடுத்துக்காட்டு
உதாரணமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை வருகிறீர்கள் என்றால் ஆங்காங்கே வரும் வழிகளில் மதுரைக்கு எவ்வளவு தூரம் உள்ளது ?, திருச்சிக்கு எவ்வளவு தூரம் உள்ளது? என்று பலகைகளில் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Image Source: istock
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு
இந்த வழிகாட்டு பலகைகள் அனைத்துமே வாகன ஓட்டிகள் கவனத்திற்காகவே வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியான பாதையில் பயணம் மேற்கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
Thanks For Reading!
Next: யானைகளுடன் நெருங்கி பழகலாமா? தென்னிந்தியாவின் சில சிறந்த யானை முகாம் இதோ!