[ad_1] ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்!

₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்!

mukesh M, Samayam Tamil

Jul 17, 2024

1000 கோடிக்கு மேல்!

1000 கோடிக்கு மேல்!

இந்திய திரைப்படங்களில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து செய்து, சாதனை படைத்த திரைப்படங்கள் ஒரு சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

தங்கல் - ₹2,023.81 கோடி!

நடிகர் ஆமிர் கான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம். மல்யுத்தம் தொடர்பான இந்த திரைப்படம் சுமார் ₹2,023.81 கோடி வசூல் செய்து, 2000 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் எனும் பெயர் பெற்றது!

Image Source: instagram-com

பாகுபலி 2 - ₹1,810.595 கோடி!

தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் வெளியாகி பின் இந்தி, கன்னடா உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு டப் செய்யப்பட்ட இந்த திரைப்படம் சுமார் ₹1,810.595 கோடி வசூல் செய்தது!

Image Source: instagram-com

RRR - ₹1,387.26 கோடி!

நடிகர் ராம் சரண், Jr NTR நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் RRR. தெலுங்கு மொழியில் வெளியான இத்திரைப்படம் சுமார் ₹1,387.26 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com

KGF: Chapter 2 - ₹1,250 கோடி!

1000 கோடிக்கு மேல் வசூல் படைத்து முதல் கன்னட திரைப்படம் KGF: Chapter 2. 2022-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சுமார் ₹1,250 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com

ஜவான் - ₹1,148.32 கோடி!

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் ஷாரூக் கான் - நயன்தாரா நடிக்க கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத்திரைப்படம் சுமார் ₹1,148.32 கோடி வசூல் செய்தது!

Image Source: instagram-com

பதான் - ₹1,050.3 கோடி!

நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் பதான். ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லா இத்திரைப்படம் சுமார் ₹1,050.3 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com

கல்கி 2898 AD - 1000 கோடி!

1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD. தற்போதும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் கல்கி, 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Image Source: instagram-com

1000 கோடி - தவறவிட்ட படங்கள்!

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பஜ்ரங்கி பாய்ஜான், 2023-ஆம் ஆண்டு வெளியான அனிமல் ஆகிய திரைப்படங்கள் முறையே ₹918.18 மற்றும் ₹917 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதாவது, 1000 கோடி கிளப்பினை நூலிழையில் தவறவிட்டன!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: ​'கிரிக்கெட் வீரர்' முதல் 'நடிகர்' வரை - விஷ்ணு விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]