May 4, 2024
BY: Anoj1 வயதை தாண்டிய குழந்தைக்கு உணவளிக்கும் போது புதினா, கொத்தமல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சட்னியை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு; புதினா - சிறிதளவு; இஞ்சி - சிறிய துண்டு; உப்பு - தேவைக்கேற்ப; எலுமிச்சை சாறு - சில சொட்டுகள்; தயிர் - 2 டீஸ்பூன்
Image Source: istock
முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை ஒன்றாக சேர்க்க வேண்டும்
Image Source: pexels-com
அடுத்து நறுக்கிய இஞ்சி துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
Image Source: istock
பின் எலுமிச்சை சாற்றை பிழிந்து அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைப்பதை உறுதி செய்யவும்
Image Source: pexels-com
அடுத்து, ஒரு பவுலில் 2 டீஸ்பூன் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
அதில், மிக்ஸியில் அரைத்த பேஸ்டில் 2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால் டேஸ்டி சட்னி ரெடி
Image Source: istock
இதை குழந்தைகளுக்கு இட்லி அல்லது தோசையுடன் கொடுத்தால் கட்டாயம் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காரம் சுத்தமாக இல்லாதததால், அடம்பிடிக்காமல் சாப்பிட செய்வார்கள்
Image Source: pexels-com
மீதமான சட்னியில் 1 அல்லது 2 நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் மீண்டும் அரைத்து பெரியவர்களுக்கு பரிமாற செய்யலாம் அல்லது பிரிட்ஜில் பத்திரமாக சேமித்து அடுத்த முறை குழந்தைகளுக்கு அளிக்கலாம்
Image Source: istock
Thanks For Reading!