[ad_1] 12th fail மட்டுமல்ல 27 வீடுகளில் தங்கியுள்ள 'ஆர்.ஜே பாலாஜி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

12th fail மட்டுமல்ல 27 வீடுகளில் தங்கியுள்ள 'ஆர்.ஜே பாலாஜி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Anoj

Jun 20, 2024

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

ஆர்.ஜே பாலாஜி, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் Balaji Patturaj. இவருக்கு ஒரு தம்பியும், 3 தங்கைகளும் உள்ளனர். முதல் முறை 12ம் வகுப்பில் தோல்வியடைந்தாலும், பிறகு தேர்ச்சிபெற்று கம்பியூட்டர் சைன்ஸ் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தார்

Image Source: instagram-com/irjbalaji

ஜர்னலிசம் ஆசை

ஆர்.ஜே பாலாஜி உறவினர் தேசிய ஊடகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவரை ரோல் மாடலுக்கு எடுத்து ஊடகத்துறையில் முதுநிலை படிப்பில் சேர்ந்தார். ஆனால், அவர் எழுதிய 56 வார்த்தை ரிப்போர்டில் 47 இலக்கணப் பிழைகள் இருந்ததால், ஆங்கில ஜர்னலிசம் நமக்கு சரிப்பட்டு வராது என முடிவு செய்தார்

Image Source: instagram-com/irjbalaji

ரேடியோ ஜாக்கி விளம்பரம்

செய்தித்தாளில் ரேடியோ ஜாக்கி விளம்பரத்தை பார்த்துவிட்டு கோவையில் ரேடியோ மிர்ச்சிக்கு ஆடிஷன் சென்றுள்ளார். முதல் முறை ரிஜெக்ட் ஆனாலும், 2006ல் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது

Image Source: instagram-com/irjbalaji

கிராஸ் டாக் ஹிரோ

4 ஆண்டுகளுக்கு பிறகு ரேடியோ மிர்ச்சி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை வந்த பாலாஜி, Big FM-ல் சேர்ந்துள்ளார். அவர் Take it Easy ஷோவில் கொண்டு வந்த Cross Talk மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே ஷோவில் ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம்பிடித்தார்

Image Source: instagram-com/irjbalaji

சினிமா பயணம்

2013ல் சினிமா பயணத்தை ஆர்.ஜே பாலாஜி தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய ரோலில் நடித்த அவர், LKG படம் மூலம் ஹிரோவாக களமிறங்கினார். பிறகு, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்

Image Source: instagram-com/irjbalaji

கிரிக்கெட் வர்ணனையாளர்

ரேடியோ, சினிமாவுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் வர்ணனையாளராகும் மாறினார். பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழ் கமெண்ட்ரியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நகைச்சுவையுடன் டெலிவரி செய்தார். அவரது பேச்சுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது

Image Source: instagram-com/irjbalaji

27 வீடுகள்

ஆர்.ஜே பாலாஜியின் தாயார் வேலைக்காக சுமார் 19 ஏரியாவுக்கு மாறியதாகவும், 27 வீடுகளில் தங்கியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறினார். அடிக்கடி இருப்பிடத்தை மாற்றியதால் சுமார் 11 பள்ளிகளில் ஆர்ஜே பாலாஜின் பள்ளி வாழ்க்கை பயணித்துள்ளது

Image Source: instagram-com/irjbalaji

திருமணம்

ஆர்ஜே பாலாஜிக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. திவ்யா என்பவரை 2003ல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Image Source: instagram-com/irjbalaji

சமூக ஆர்வலர்

சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட ஆர்ஜே பாலாஜி, பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். டிஜிட்டல் ஊடக தளங்கள் வாயிலாக நீர் மேலாண்மை, கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்ற விஷயங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

Image Source: instagram-com/irjbalaji

Thanks For Reading!

Next: எழுத்தாளராக மாறிய ‘இந்திய திரைப்பட நடிகர்கள்’!

[ad_2]