Anoj
May 27, 2024
கேன்ஸ் திரைப்பட விழாவில் 20 கிலோ எடை உடையில் கலக்கல் என்ட்ரி கொடுத்த நான்சி தியாகி, இணையவாசிகள் தேடும் முக்கிய நபராக மாறியுள்ளார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/nancytyagi___
உத்தரப் பிரதேசத்தில் Baghpat மாவட்டத்தை சேர்ந்தவர் நான்சி. இவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால், கரோனா லாக்டவுன் காரணமாக UPSC பயிற்சியில் சேர முடியாமல் போகியுள்ளது.
Image Source: instagram-com/nancytyagi___
UPSC கதவு மூடிய நிலையில், ஆடை வடிவமைப்பை நான்சி கையில் எடுத்துள்ளார். எவ்விதமான பயிற்சி வகுப்புக்கு செல்லாமலே, பிரமிக்க வைக்கும் ஆடைகளை நான்சி வடிவமைக்க தொடங்கினார்.
Image Source: instagram-com/nancytyagi___
சரோஜினி நாகர் மார்க்கெட் நான்சியின் ஃபேவரைட் ஷாப்பிங் ஸ்பாட்டாகும். அங்கு வெவ்வேறு துணிகளை பல விதங்களில் அணிகையில் நான்சியின் படைப்பாற்றல் திறனும் அதிகரித்துள்ளது. ஆடை மீது ஆசை வருவதற்கு சரோஜினி நாகர் மார்க்கெட் கூட முக்கிய காரணமாகும்
Image Source: instagram-com/nancytyagi___
ஆடைகளை வடிவமைக்க தொடங்கிய நான்சி, அதனை வீடியோவாக கேப்சர் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட தொடங்கினார். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய வீடியோ தளங்களில் நான்சியின் வீடியோஸ் வைரலாக தொடங்கியது
Image Source: instagram-com/nancytyagi___
நான்சி பிரபலங்களின் ஆடைகளை ரீ கிரியேட் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக, ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களின் ஆடைகளை கச்சிதமாக ரீ கிரியேட் செய்திருந்தார்
Image Source: instagram-com/nancytyagi___
77வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு 20 கிலோ எடைக்கொண்ட பிங்க நிற கவுனில் ஒய்யார நடையில் நான்சி என்ட்ரி கொடுத்தார்
Image Source: instagram-com/nancytyagi___
இந்த கவுனை வடிவமைக்க 30 நாட்கள் ஆனதாகவும், சுமார் 1000 மீட்டர் துணியால் ரெடி செய்வததாகவும் தெரிவித்தார். அவரது அழகிய ஆடை ஏராளமான பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது.
Image Source: instagram-com/nancytyagi___
சோசியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருக்கும் நான்சி, வடிவமைத்த அனைத்து ஆடைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட செய்வார். அவரது இன்ஸ்டா பக்கத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்
Image Source: instagram-com/nancytyagi___
Thanks For Reading!