Aug 2, 2024
சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் வேக்ஸ் ஒன்றினை சர்க்கரை, தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
எலுமிச்சை பழம் - 1 | சர்க்கரை - 1 கப் | தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி - சாறு புழிந்து 1½ ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் ½ கப் அளவு தண்ணீருடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
Image Source: istock
முறையாக தயார் செய்த இந்த பாகுவை கையில் பிடிக்கும் பதத்திற்கு ஆறவிட்டு பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துவிட தேவையற்ற முடிகளை நீங்கும் வேக்ஸ் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த வேக்ஸினை சருமத்தில் காணப்படும் தேவையற்ற முடிகளின் மீது அப்ளை செய்து - உலர விட்டு பின் எதிர் திசையில் வேகமாக அகற்றி, தேவையற்ற முடிகளை நீங்கலாம்!
Image Source: istock
சருமத்தில் இந்த வேக்ஸினை பயன்படுத்தும் முன் டால்கம் பவுடர் பயன்படுத்துவது, வேக்ஸின் செயல்முறையின் போது உண்டாகும் வலியை குறைக்கும்!
Image Source: istock
சருமத்தில் இந்த வேக்ஸ் பயன்படுத்தி முடிகளை அகற்றிய பின், சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து பின் மாய்சரைஸர் கிரீம் அப்ளை செய்வது நல்லது!
Image Source: istock
சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் செய்த இந்த வேக்ஸ் பயன்படுத்தும் போது சருமத்தில் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை கண்டால் உடனடியாக சரும பராமரிப்பு நிபுணரை அணுகுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!