[ad_1] 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்

Jul 27, 2024

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில டிப்ஸ்

Nivetha

ஆரோக்கியம்

தற்போதைய காலக்கட்டத்தில் பொது ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் குறிப்பாக 40 வயதுக்கு மேல் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வது அவசியமாகிறது. சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியம்.

Image Source: istock

உடற்பயிற்சி

குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம், எலும்பு அடர்த்தி பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை எதிர்கொள்ள அவர்கள் தொடர்ச்சியாக சத்தான உணவுகளை கொண்ட டயட்டை பின்பற்ற வேண்டும், அதே போல் தினமும் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

Image Source: istock

உடல் எடை

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் 40 வயதிற்கு மேலான பெண்கள் தங்களது உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. அதே போல் நீரிழிவு நோய், இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.

Image Source: istock

ஆரோக்கியமான காலை உணவு

வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கும் செயலில் ஆரோக்கியமான உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையற்ற கலோரிகள் உட்கொள்வதையும் இது தடுக்கிறது. இதற்கிடையே உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் காலை உணவை தவிர்க்கிறார்கள். இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Image Source: istock

உப்பை குறைத்தல்

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து பயன்படுத்தவும். இது உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்மந்தமான சுகாதார பிரச்சனைகளை தவிர்க்க உதவும். எனவே தினசரி உணவில் 2300மிகி.க்கும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source: istock

போதுமான சுகாதாரம்

உணவை சமைக்கும் முன் மற்றும் உணவை சாப்பிடும் முன்னர் கைகளை நன்று கழுவ வேண்டும். அதிலும் சோப்பினை பயன்படுத்தி கழுவுவது மிகவும் சிறந்தது. இது போன்ற பொது சுகாதாரங்களை அன்றாட வழக்கத்தில் ஓர் அங்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: istock

தூக்கம்

பெண்களுக்கு தினமும் இரவு 8 மணிநேரம் நல்ல நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்து கொள்ளுங்கள், இது அறிவாற்றலை மேம்படுத்துவதோடு, மன அமைதி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு மிகவும் அவசியம்.

Image Source: istock

அடிக்கடி உடல் செயல்பாடுகள்

நீச்சல், ஏரோபிக் போன்ற பயிற்சிகள் இதய துடிப்பினை கட்டுப்படுவதோடு, ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. ஃபிட்டாக இருக்க முக்கிய பங்கினை வகிக்கிறது, பெண்கள் தங்களின் நீண்டக்கால உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Image Source: istock

ஸ்டாமினா

பெண்கள் கார்டியோவாஸ்குலர் வெர்க்ஒவுட்ஸ் செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி அவர்களது ஸ்டாமினாவை மேம்படுத்த உதவுகிறது. நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்க வைப்பதோடு மனநிலையையும் மேம்படுத்துகிறது. எனவே இந்த டிப்ஸ்களை 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பின்பற்றவும்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: மூளையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள், தகவல் அறிவோம் வாருங்கள்

[ad_2]