May 27, 2024
தசைப் படிப்படியாக பலவீனம் அடைவதை சர்கோபீனியா என மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது. உடல் பருமனாக உள்ளவர்களை இது அதிகமாக பாதிக்கிறது. தசை பலவீனம், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கு இது முக்கிய காரணியாக உள்ளது.
Image Source: istock
தசைகள் ஆரோக்கியமாக இருக்க புரதங்கள் அவசியம். சர்கோபீனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு புரதங்கள் உடலில் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் ஹார்மோன்களில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக தசை நார்கள் பாதிக்கப்படுகின்றன.
Image Source: istock
தினசரி வேலைகளை செய்வதில் சிரமம், வேகமாக நடக்க முடியாத நிலை, படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், உடலில் நடுக்கம், கீழே விழுவது போன்ற மாயை போன்ற அறிகுறிகளை எதிர் கொள்ளலாம்.
Image Source: pexels-com
வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இந்த நோயை தடுக்க சில வழிகள் உள்ளன. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற சில ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் தசை இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை சரி செய்யும் சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Image Source: istock
இந்த நோய் பாதிப்பினால் உங்கள் உடலானது மிகவும் சோர்வடைந்து அன்றாட வேலைகளை பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே நீங்கள் உடற்பயிற்சி, சமநிலை பயிற்சிகள் போன்ற உடல் செயல்பாடு சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது தசை இழப்பு தடுக்கப்படுகிறது.
Image Source: istock
உடற்பயிற்சிகளில் தசையை வலிமைப்படுத்த கூடிய பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கை கால்களில் அதிக தசை இழப்பு ஏற்படும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Image Source: istock
தசை இழப்பை சரி செய்யக்கூடிய உணவுகளை கொள்ள வேண்டும். குறிப்பாக உங்கள் உணவில் கலோரிகள் மற்றும் புரதச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Image Source: istock
தசை ஆரோக்கியத்துக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்படும் போது தசை பலவீனம் அதிகரிக்கிறது. எனவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது இழந்த தசை வலிமையை மீட்டு தர உதவுகிறது.
Image Source: pexels-com
தசை வலிமை பாதிக்கப்படும் போது நமது உடலுக்கு அதிக ஓய்வு தேவை. தினசரி குறைந்தது 8-இல் இருந்து 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!