Jul 20, 2024
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்கள் தங்கள் மாதவிடாய் முற்றிலும் நிற்கும் தருணத்தினை எதிர்கொள்கிறார்கள். இது மிகவும் மோசமாக அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்கள் பதற்றம், பலவீனம், இரவில் வியர்த்தல், மனநிலை மாற்றம் உள்ளிட்ட அறிகுறிகளை எதிர்கொள்கிறார்கள்.
Image Source: istock
இத்தகைய நிலையை எதிர்கொள்ளும் 40 வயது நிரம்பத்தக்க பெண்களுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்த ஒரு சிறப்பு பானத்தை அவர்களது உணவில் சேர்பதற்கான வழிமுறையை தான் இப்பதிவில் காணவுள்ளோம்.
Image Source: pexels
இந்த சிறப்பு பானத்தை செய்ய ஆளி விதைகள் 5 தேக்கரண்டி, பெருஞ்சீரக விதைகள் 5 தேக்கரண்டி, தண்ணீர் 200மிலி, சாஸ்ட்பெர்ரி தேநீர் பை ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: pexels
ஒரு கடாயை எடுத்து அதில் 2 விதைகளையும் போட்டு சுமார் 5 நிமிடங்கள் நன்கு வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த விதைகளை சூடி ஆறிய பிறகு பிளண்டரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து கொள்ளுங்கள்.
Image Source: pixabay
1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நாம் பொடித்து வைத்துள்ள பொடியில் 1 ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து விட்டு அதில் சாஸ்ட்பெர்ரி தேநீர் பை சேருங்கள். அவ்வளவு தான் பானம் தயார்.
Image Source: Samayam Tamil
இந்த சிறப்பு பானத்தை பெரி மெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் அறிகுறிகள் கொண்ட 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால் இதன் அறிகுறிகள் குறையும்.
Image Source: istock
மாதவிடாய் காலத்தில் உடலின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் உடலில் பெரும் தாக்கத்தினை செயல்படுத்துகிறது. இந்நிலையில், ஆளி விதைகளில் காணப்படும் லிக்னின், ஈஸ்ட்ரோஜென் அளவினை சமநிலையில் வைக்கிறது.
Image Source: istock
பெருஞ்சீரக விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளதால் இது பெண்களின் மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளை தடுக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!