Jul 15, 2024
பழங்கள் என்றாலே உடலுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான். ஆனால் தொடர்ந்து 72 மணிநேரம் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
Image Source: pexels-com
அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், ஒரு சிலர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பழங்களை சாப்பிடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் கிடைப்பதோடு ஜீரண சக்தி மேம்படும், இதய ஆரோக்கியம், சுவாச ஆரோக்கியம் உள்ளிட்டவையும் மேம்படும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
இந்த புதுவித முயற்சியில் பழங்களை உண்ணும் முதல் நாளிலேயே நாம் சாப்பிடும் பழங்கள் ஜீரணமாகி அதிலுள்ள சத்துக்களை நமது உடல் உறிஞ்ச துவங்குகிறது.
Image Source: pexels-com
பழத்திலுள்ள நார்சத்துக்கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதோடு வயிறு வலியையும் போக்குகிறது.
Image Source: pexels-com
பழங்களை மட்டும் உட்கொள்ளும் நபர்கள் அதன் 2ம் நாளில் தனது உடலிலுள்ள கொழுப்புக்களை எரிக்க விரும்பினால் கலோரிகளை குறைத்து கொண்டு உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pexels-com
பழங்களை உண்ணும் மூன்றாம் நாளில் அதிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நமது உடல் பெறும்.
Image Source: pexels-com
முன்றாம் நாள் உடல் சோர்வு, கலோரிகள் எரிதல் போன்ற செயல்பாடுகள் இல்லையென்றாலும், உற்பத்தியாகும் சத்துக்கள் அன்றைய தினத்தில் செய்யவேண்டிய வேலைகளை செய்ய போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
இந்த 72 மணிநேரத்தில் ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கள் நிறைந்த ஆப்பிள், பெர்ரி, ஆரஞ்சு, கிவி, மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
Image Source: pexels-com
தொடர்ந்து மூன்று நாட்கள் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் பெரிதளவில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்றாலும், உடலுக்கு தேவையான இரும்புச்சத்தும், கால்சியமும் கிடைக்காது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
Image Source: pexels-com
Thanks For Reading!