Jun 27, 2024
நீட் தேர்வுக்கு அடிப்படையாக அமையும் பாடங்களின் தொடக்கம் 9ஆம் வகுப்பில் தான் தொடங்குகிறது. இதனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இடம்பெறும் விரிவான விளக்கத்தை எளிதாக மற்றும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.
Image Source: istock
நீட் தேர்வுக்கு உயிரியல் பாடம் அடிப்படையான ஒன்று. இதில் ஆர்வம் இருந்தால் மட்டுமே நம்மால் பயிற்சியின்போது எளிதாக படிக்க இயலும். இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்த சரியான காலமாக அமைகிறது.
Image Source: pexels-com
ஆரம்பத்திலேயே தயாராக தொடங்குவதால் நீட் தேர்வுக்கான நேர மேலாண்மை, படிப்பு அட்டவணை, சரியான அளவில் கவனம், தேர்வு திட்டமிடல் போன்றவற்றை மாணவர்களால் எளிதாக அமைத்துக் கொள்ள முடியும். இது படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கிறது
Image Source: pexels-com
9 ஆம் வகுப்பில் நீட் தேர்வுக்கான பயிற்சியை தொடங்குவது போட்டித் தேர்வுக்கான மனப்பான்மையை வளர்க்கிறது. இதன்மூலம் தேர்வு அழுத்தம், வெற்றி, தோல்வியை எதிர்கொள்ளும் மனநிலை ஆகியவற்றை எளிதாக கையாள இயலும்.
Image Source: istock
நீட் தேர்வுக்கு தொடர் பயிற்சி அவசியம் என்பதால் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கலை கண்டறிந்து அவர்களை கற்க வைக்கலாம். இதனால் பல்வேறு விதமான நம்பிக்கைகளுடன் மாணவர்கள் பயில்வார்கள்.
Image Source: istock
நீட் தேர்வுக்கு படிப்பது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்பது அதீத மன அழுத்தத்துக்கு காரணமாகிறது. இதனால் விபரீதமான முடிவை எதிர்கொள்கிறார்கள். 9 ஆம் வகுப்பில் நீட் தேர்வுக்கு தயாராவது நிதானத்தையும், கவனம் செலுத்தும் அணுகுமுறையும் உருவாக்குகிறது.
Image Source: istock
மாணவர்களுக்கு மருத்துவத்தின் மீதான ஆர்வம் குறித்து அறிய விரைவாக நீட் பயிற்சிக்கு தயாராவது அனுமதிக்கிறது. ஆர்வமில்லாமல் அழுத்தத்தால் படிப்பது மாணவர்களின் மனநலனை பாதிக்கிறது.
Image Source: istock
போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. அதனால் படிப்படியான முன்னேற்றம் என்பது வெற்றிக்கான படியாக அமையும். விரைவான நீட் பயிற்சி மாணவர்களை உந்துதலாகவும், உற்சாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
9 ஆம் வகுப்பில் நீட் தேர்வுக்கு பயில தொடங்குவது முழு பாடத்தையும் படிக்க உதவுகிறது. இதனால் பதட்டமில்லாமல் கற்க அனுமதிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!