[ad_1] 9 - 5 வேலை பார்க்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

9 - 5 வேலை பார்க்கும் நபரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

Aug 17, 2024

By: Suganthi

9 - 5 வேலை?

நீங்கள் 9 to 5 வேலை பார்க்கும் நபராக இருந்தால் நேரத்தை நிர்வகிப்பது என்பது உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குழப்பமாகவே இருக்கும். எனவே தான் உங்கள் நேரத்தை நிர்வகிக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Image Source: pexels-com

எல்லைகளை தெளிவாக அமையுங்கள்

தினசரி வேலையை தொடங்குவதற்கு முன்பு சக ஊழியர்களுடன் தெளிவான எல்லைகளை அமைப்பது முக்கியம். உங்கள் வேலை நேரத்தில் வெளியே செல்வதையோ, அழைப்புக்களை எடுப்பதையோ அல்லது மின்னஞ்சல் பார்ப்பதையோ தவிருங்கள்.

Image Source: pexels-com

பணிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

வேலையை திறம்பட முடிக்க வேண்டும் என்றால் உங்கள் பணிக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நேரத்தை அடிப்படையாக வைத்து உங்கள் முன்னுரிமைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்

நீங்கள் அவசரப்பட்டு எதையும் செய்தால் அது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. சிறிது நேரம் இசை கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்றவற்றை செய்யலாம்.

Image Source: pexels-com

வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்

தினமு‌ம் உங்கள் அன்றாட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை சேமிக்க உங்கள் வேலை ஆவணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

ஸ்மார்ட் வொர்க்

நீங்கள் கடினமாக உழைப்பதை விட ஸ்மார்ட் வொர்க் செய்வது மிகவும் அவசியம். புத்திசாலித்தனமாக வேலை செய்யும் போது தேவையில்லாத மன அழுத்தம் வராது. திறம்பட வேலையை குறுகிய நேரத்தில் முடிக்க முடியும்.

Image Source: pexels-com

முடியாது என்று சொல்ல தயங்காதீர்கள்

தேவைப்படும் போது முமடியாது என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். கூடுதல் வேலைகளை வாங்கி வைத்துக் கொண்டு திணறாதீர்கள். கூடுதல் வேலை வேண்டாம் என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.

Image Source: pexels-com

போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்

தினசரி வேலைக்கிடையில் உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது மிகவும் அவசியம். இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.

Image Source: pexels-com

உலக சுகாதார நிறுவனம் கருத்து

வேலையில் ஏற்படும் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே வேலை முக்கியம் என்றால் கூட உங்கள் உடல் நலமும் மன நலமும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: உங்கள் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி எப்படி புரியும் படி பேசுவது?

[ad_2]