[ad_1] Acidity பிரச்சனையை போக்க துளசி இலை உதவுமா?

Jun 28, 2024

Acidity பிரச்சனையை போக்க துளசி இலை உதவுமா?

mukesh M

நெஞ்செரிச்சலுக்கு துளசி இலைகள்!

Acidity எனும் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடிவு பெற துளசி இலைகள் உதவுமா? நெஞ்செரிச்சலை போக்க இந்த துளசி இலைகளை எப்படி உட்கொள்வது? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

துளசி இலைகளின் காணப்படும் அல்சர் எதிர்ப்பு பண்பு, உள் உறுப்புகளை குளிரூட்டும் தன்மை கொண்டது. அந்த வகையில் இந்த துளசி இலைகளின் நுகர்வு, நெஞ்செரிச்சல் பிரச்சனை உண்டாவதன் வாய்ப்புகளை குறைக்கிறது.

Image Source: istock

வாயு தேக்கத்தை தடுக்கிறது!

துளசி இலைகளின் கார்மினேடிவ் பண்புகள் சீரான செரிமான செயல்பாட்டை உறுதி செய்வதோடு, வாயு தேக்கத்திற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. அந்த வகையில் நெஞ்செரிச்சல் ஆபத்தை குறைக்கிறது.

Image Source: istock

அழற்சிகளை கட்டுப்படுத்துகிறது!

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட துளசி இலைகள், கல்லீரல் மற்றும் உணவு குழாயில் உண்டாகும் அழற்சிகளை தடுத்து, அழற்சியால் உண்டாகும் வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

Image Source: istock

சரி, எப்படி உட்கொள்வது?

துளசி இலைகளை அப்படியே பச்சையாக வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்குவது - துளசி இலைகளின் முழுமையான பலனை பெற உதவும்.

Image Source: istock

சட்னியாக உட்கொள்ளுங்கள்!

இதேப்போன்று இந்த துளசி இலைகளை கொத்தமல்லி, பிங்க் உப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து சட்டியாக அரைத்து, உங்கள் வழக்கமான உணவுடன் சேர்த்து உட்கொள்ள நல்ல பலன் காணலாம்!

Image Source: istock

துளசி நீர்!

இதேப்போன்று இந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 2 கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் ஆறவிட்டு துளசி நீராக உள்ளுக்கு எடுத்துக்கொள்ளவும் நல்ல பலன் காணலாம்!

Image Source: pexels-com

அளவுக்கு மிகுதியாக கூடாது!

நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவும் இந்த துளசி இலைகளை அளவுக்கு மிகுதியாக எடுத்துக்கொள்வது, இரத்தம் உரைதல், குறை இரத்த அழுத்ததம் - உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்!

Image Source: istock

எச்சரிக்கை!

நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோய் பிரச்சனைகளுக்கு மருந்து - மாத்திரை எடுத்துக்கொள்ளும் நபர்கள், இந்த துளசி நுகர்வில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்தளவுக்கு மருத்துவர் பரிந்துரை இன்றி இந்த துளசி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: தினமும் ‘8 வடிவ நடைப்பயிற்சி’ செய்வதால் கிடைக்கும் பலன் என்ன?

[ad_2]