Jun 13, 2024
கணினிக்கு மனித மூளை போன்ற சிந்தனைத் திறனை வழங்குவது என்பது பல வழிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், பிற தொழில்நுட்பங்களைப் போலவே நன்மைகளும் தீமைகளும் இதில் கலந்தே உள்ளன.
Image Source: pexels-com
AI-ஐ பயன்படுத்துவதன் மூலம் வேகமாகவும், திறனுடனும் பணிகளை முடிக்கலாம். இது குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் வேலைப் பளுவைக் குறைத்து, நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்துகிறது.
Image Source: unsplash-com
AI முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய படி என்றாலும், இதன் பயன்பாடு பலரின் வேலைகள் பறிபோவதற்கான காரணமாக அமையும் என்கிற அச்சம் மக்கள் மனதில் உள்ளது.
Image Source: unsplash-com
AI அதிகப்படியான தகவலைக் கூட எளிதில் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. இதன் மின்னல் வேகப் பகுப்பாய்வு ஆராய்ச்சிகளில் மேம்பட்ட முடிவை சுலபமாக எடுக்க உபயோகமாக இருக்கும்.
Image Source: unsplash-com
AI மூலம் அதிக அளவு டேட்டாகளை சேமிக்க முடிந்தாலும் அவை பாதுகாப்பாக உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஹாக்கிங், தகவல் திருட்டு போன்ற சவால்களும் வளர்கிறது
Image Source: unsplash-com
மருத்துவத் துறையில் நோய்களைத் துல்லியமாகக் கண்டறியவும் சரியான மருந்துகளைப் பரிந்துரைக்கவும் AI உதவுகிறது. இது நோயாளிகளின் சிகிச்சை முறையை எளிதாக்கியதோடு வேகப்படுத்தியும் உள்ளது.
Image Source: unsplash-com
உணர்வு ரீதியாக எடுக்க வேண்டிய சில முடிவுகளை AI பகுத்தறிதலைக் கொண்டு மட்டும் எடுப்பதால், அந்த முடிவு தவறாகிப் போவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
Image Source: unsplash-com
AI மூலம் பல மொழிகளில் கதை மற்றும் கட்டுரைகளை எளிதில் எழுதுவதோடு, கண் இமைக்கும் நொடியில் பல மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யலாம். இது உலகளாவிய தொடர்பினை எளிதாக்கி உள்ளது.
Image Source: unsplash-com
பல தொழில்கள் AI-ஐ மட்டும் சார்ந்து செயல்படுவதால், இது மனிதர்களின் சோம்பேறித்தனத்தை அதிகரிப்பதோடு, எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைப் பற்றிய மிகப் பெரிய அச்சத்தை மனதில் விதைக்கிறது.
Image Source: unsplash-com
Thanks For Reading!