Aug 17, 2024
பாடி வாஷ் நிறைய ப்ளேவர்களிலும் உங்களுக்கு விருப்பமான நறுமணங்களிலும் கிடைக்கிறது. பாடி வாஷில் கிளிசரின் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன. சோப்பு உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு வரும் இவற்றில் எது சிறந்தது என பார்ப்போம்.
Image Source: pexels-com
உங்களுக்கு சென்ஸ்டிவ் சருமம் இருந்தால் பாடி வாஷ் சிறந்ததாக இருக்கும். இது சருமத்தை மென்மையாகவும் எரிச்சல் உணர்வை குறைக்கவும் உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
Image Source: istock
சோப்புகள் அன்றைய காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கொழுப்புகள் மற்றும் வெண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை எளிதாக சுத்தம் செய்கிறது.
Image Source: istock
வறண்ட சருமம் மற்றும் சென்ஸ்டிவ் சருமம் இருப்பவர்களுக்கு பாடி வாஷ் சிறந்தது. அதே மாதிரி முகப்பருக்கள் மற்றும் எண்ணெய் சருமம் இருப்பவர்கள் அதற்கேற்ற பாடி வாஷை பயன்படுத்தலாம்.
Image Source: istock
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட சோப்புகள் உடற்பயிற்சி செய்த பிறகு வரக் கூடிய வியர்வை நாற்றம் மற்றும் வெயிலில் ஏற்படும் வியர்வை இவற்றை போக்க உதவுகிறது. எனவே வியர்வை நாற்றம் போக சோப்பை பயன்படுத்தலாம்
Image Source: istock
வறண்ட சருமம் இருப்பவர்கள் கிளிசரின் அல்லது ஷியா வெண்ணெய் கொண்ட சோப்பை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு சரும மென்மையை தருகிறது.
Image Source: istock
காலையில் எழுந்ததும் சீக்கிரம் குளித்து விட்டு செல்வதற்கு பாடி வாஷ் மிகவும் எளிது. லூஃபா அல்லது கடற்காசியை கொண்டு உங்கள் சருமத்தை தேய்த்து சுத்தம் செய்யலாம்.
Image Source: istock
சேமிப்பு என்று வரும் போது பாடி வாஷை விட சோப்பு மிகவும் சிறந்தது. சோப்பு நீண்ட நாட்களுக்கு வரக் கூடியது. பாடி வாஷை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை தெரியாது.
Image Source: istock
பாடி வாஷ் மற்றும் சோப்பு இரண்டிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கிறது. எனவே இதில் உங்கள் சரும வகைக்கு ஏற்ற மற்றும் பயன்தரக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
Image Source: istock
Thanks For Reading!