Jun 17, 2024
உலகளவில் பிரபலமடைந்த விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட் விளையாட்டில், ஒரு பேட்ஸ்மேன் எத்தனை வகையில் ஆட்டமிழக்கிறார்? மொத்தம் எத்தனை வகை OUT கிரிக்கெட்டில் உள்ளது? என இங்கு நாம் காணலாம்!
Image Source: x-com
பந்துவீச்சாளர் வீசும் பந்து, பேட்ஸ்மேனை ஏமாற்றி அவருக்கு பின் உள்ள ஸ்டெம்புகளை அடித்து, பைஸ்களை கீழே விழ வைப்பது Bowled Out எனப்படுகிறது.
Image Source: x-com
ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை (தரையில் படாமல்) களத்தில் உள்ள எதிர் அணி வீரார்கள் பிடித்து வெளியேற்றும் முறை Caught Out எனப்படுகிறது!
Image Source: x-com
பேட்ஸ்மேனின் மட்டையில் பந்து படாமல் அவரது உடல் பகுதியில்; குறிப்பாக அந்த பந்து ஸ்டெம்புகளை நோக்கி செல்லும் வகையில் இருப்பின் அது Leg Before Wicket (LBW) என அழைக்கப்படுகிறது.
Image Source: x-com
எதிர்வரும் பந்தை தவறவிட்டு கிரீஸை தாண்டி பேட்ஸ்மேன் செல்லும் போது, தவறிவந்த பந்தை பிடித்து ஸ்டெம்புகளை (விக்கெட் கீப்பர்) வீழ்த்தினால் அது Stumped Out!
Image Source: x-com
பந்தை அடித்து, கிரீஸ்களுக்கு இடையில் ஓட்டங்களை குவிக்கும் முயற்சிக்கு இடையில், களத்தில் உள்ள வீர்கள் பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள ஸ்டெம்பை வீழ்த்தி விக்கெட் எடுக்கும் முறை Run-out எனப்படுகிறது!
Image Source: x-com
பந்தை அடிக்கும் போதோ (அ) ஓட்டங்களை குவிக்க முயற்சிக்கும் போது ஒரு பேட்ஸ்மேன் தனது பேட் (அ) உடலால் ஸ்டெம்புகளை இடித்து, வீழ்த்தும் நிலை Hit Wicket எனப்படுகிறது!
Image Source: x-com
ஒரு விக்கெட்டிற்கு பின் களமிறங்குவதற்கோ (அ) ஒரு பந்துக்கு பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கோ 3 நிமிடங்களுக்கு மேல் ஒரு பேட்ஸ்மேன் எடுத்துக்கொண்டால் அவர் Timed Out முறையில் வெளியேற்றபடுவார்!
Image Source: x-com
பந்துவீச்சாளர் வீசும் பந்தை ஒரு பேட்ஸ்மேன் இரண்டு முறை (இரண்டாவது முறை வேண்டுமென்றே செய்வது) மட்டையால் அடித்தால் அவர் Hit the ball twice முறைப்படி Out என அறிவிக்கப்படுவார்!
Image Source: x-com
Thanks For Reading!