Aug 7, 2024
காசோலை வழங்கியவரின் கணக்கில் போதிய பணம் இல்லாதது, முறையற்ற காசோலை பரிமாற்றம் போன்ற பல காரணங்களினால் தடைபடும் பரிவர்த்தனைகள் ‘செக் பௌன்ஸ் (Cheque Bounce)’ எனப்படுகிறது. இந்த ‘Cheque Bounce’-னை பதற்றம் இல்லாமல் கையாள்வது எப்படி என்று இங்கு காணலாம்!
Image Source: istock
ஏன் காசோலை பௌன்ஸ் ஆனது என்பதை வங்கியில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக போதுமான பணம் இல்லாதது, தவறான கையெழுத்து அல்லது காலாவதியான காசோலை போன்ற காரணங்கள் சொல்லப்படும்.
Image Source: pexels-com
ரத்தான காசோலை மற்றும் அந்த வங்கிக் கணக்கின் விவரங்களையும், காசோலை வழங்கப்பட்ட தேதி, வங்கியில் செலுத்திய தேதி மற்றும் ரத்தான தேதி ஆகிய விவரங்களைச் சேகரித்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
காசோலை வழங்கியவரிடம் விவரத்தைக் கூறி தவறு யார் மீது என்பதைப் பரிசீலித்து, அவற்றை சரி செய்த பிறகு மீண்டும் ஒரு காசோலையைப் பெற்று வங்கியில் சமர்ப்பியுங்கள்.
Image Source: pexels-com
காசோலை மீண்டும் சமர்ப்பித்த பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் எந்த பிரச்சனையும் இல்லாத பட்சத்திலும் பணம் வரவில்லை என்றால் வழக்கறிஞரை அணுகி தொகையைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.
Image Source: pexels-com
காசோலை வழங்கியவர் நோட்டீஸ் அனுப்பியும் சரியான பதில் அளிக்கவில்லை அல்லது பணத்தை செலுத்தவில்லை என்றால் அவர் மீது நீதிமன்றத்தில் முறையாக வழக்கு தொடரலாம்.
Image Source: pexels-com
நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்த பிறகு காசோலை பௌன்ஸ் ஆனதன் ஆதாரங்களான ரத்தான காசோலை மற்றும் நீங்கள் சேகரித்து வைத்த விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பியுங்கள்.
Image Source: pexels-com
வழக்கு தொடரப்பட்ட பின், குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், செல்லாத காசோலை கொடுத்தவருக்கு சட்டப்படி சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
Image Source: pexels-com
நீண்ட நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்க, இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தர் மூலம் பேசி சமரச தீர்வு காணலாம். இது அதிக நேர மற்றும் பண விரையத்தை மிச்சப்படுத்தும்.
Image Source: pexels-com
Thanks For Reading!