[ad_1] ​'Creative' மனிதர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!​

Jun 5, 2024

​'Creative' மனிதர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!​

Anoj

படைப்பாற்றல் திறன்

படைப்பாற்றல் என்பது மனிதனின் மிக முக்கியமான குணங்களில் ஒன்றாகும். இது நம்மை மற்றவர்களிடத்தில் இருந்து தனித்து காட்டும். கதை எழுதுவதில் இருந்து கம்யூட்டர் வரை நமது படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். அப்படிப்பட்ட படைப்பாற்றல் சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி காணலாம்.

Image Source: pexels-com

கிராஃபிக் டிசைனர்

வலைத்தளங்களை உருவாக்குதல், லோகோ, போஸ்டர்கள், பதாகைகள், பழைய படங்களை தற்கால படங்களாக மாற்றுதல் போன்ற பணிகளை உள்ளடக்கியதாகும். ஒரு தகவலை திட்டமிட்டு, உருவாக்கி, செயல்படுத்தி, சரியான இலக்கை அடையும் வரை தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

Image Source: pexels-com

வெப்சைட் டிசைனர்

இணையதள வடிவமைப்பாளர் வலைத்தளங்களை உருவாக்கி அது சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வார். காலத்திற்கு ஏற்ப அந்த தளங்களின் பயன்பாடு, தேவைகளை மாற்றி பயனாளர்கள் எளிய வகையில் பயன்படுத்த வழிவகை செய்வார்.

Image Source: pexels-com

அனிமேஷன்

புகைப்படங்களோ, ஓவியங்களோ சரியாக தொகுத்து காணொளியாக ஓட வைப்பது அனிமேஷன் மூலம் சாத்தியமானது. இதில் 2டி, 3டி, மோஷன் கிராஃபிக்ஸ், ஸ்டாப் மோஷன் என பல வகைப்படும். கார்ட்டூன், ஹாலிவுட் படங்களில் இதனை நாம் கண்டிருக்கலாம்.

Image Source: pexels-com

UI - UX வடிவமைப்பாளர்

பயனர்கள் தங்களுடைய தயாரிப்புகளில் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அந்த வசதிகளை வடிமைப்பவது இவர்களின் பணியாகும். இவர்களின் தேவை மொபைல் போன் மற்றும் இணையதளங்களில் அதிகமாக இருக்கும்.

Image Source: pexels-com

எழுத்தாளர்

செய்திகள், விளம்பரம் மற்றும் பிற வணிக நோக்கத்திற்காக தேவையான தகவல்களை உருவாக்குபவர்கள் காப்பி ரைட்டர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தேவை அனைத்து துறைகளிலும் உள்ளது.

Image Source: pexels-com

புகைப்பட கலைஞர்

சரியான வகையில் கற்றுக்கொண்டால் உலகத்தை கேமரா மூலம் கட்டிப்போடலாம். வெவ்வேறு வகையான புகைப்படத் துறை உள்ள நிலையில் உங்களுக்கு பிடித்ததில் ஜொலிக்கலாம். அதேசமயம் அவ்வப்போது உங்களை நீங்களே அப்டேட் செய்ய வேண்டும்.

Image Source: pexels-com

வீடியோ எடிட்டர்

இன்றைக்கு மொபைல் மூலம் நாமே எடிட் செய்யும் வசதி வந்துவிட்டாலும் இதுவும் ஒரு சவாலான பணியாகும். நமது படைப்பாற்றல் மூலம் பயனாளர்களை காண விரும்பும் வீடியோவை சுவாரஸ்மாக கொடுக்க வீடியோ எடிட்டரால் முடியும். இதற்கான மென்பொருட்கள் கற்றுக்கொள்வது முக்கியம்.

Image Source: pexels-com

ஓவியர்

பள்ளிகள், மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் ஆகிய இடங்களில் ஓவியம் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணிகள் சிறந்த படைப்பாற்றல் மிக்க செயலாகும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: Microbiology படிக்கும் மாணவர்களுக்கு காத்திருக்கும் பணி வாய்ப்புகள்!

[ad_2]