Jul 3, 2024
ஹர்பஜன் சிங், இந்தியாவின் திறமையான ஆஃப் ஸ்பின் பவுலர் ஆவார். இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளார். கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியல், சினிமா என பல துறைகளிலும் கால்பதித்துள்ளார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/harbhajan3
இவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். 5 சகோதரிகளுடன் வளர்ந்த ஹர்பஜன், குடும்ப தொழிலை கவனிக்க விரும்பியுள்ளார். ஆனால், அவரது தந்தை கிரிக்கெட்டில் கவனம் செலுத்திட அறிவுறுத்தியுள்ளார்
Image Source: instagram-com/harbhajan3
ஹர்பஜனுக்கு அவரது முதல் பயிற்சியாளர் சரஞ்சித் சிங் புல்லர், பேட்ஸ்மேனாக தான் பயிற்சி அளித்துள்ளார். ஆனால், பிறகு ஸ்பீன் பவுலிங்கிற்கு மாறியுள்ளார். காலையில் 3 மணி நேரமும், மதியம் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரையும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்
Image Source: instagram-com/harbhajan3
ஹர்பஜன் சிங் ஜூலை 3ம் தேதி பிறந்துள்ளதால், அந்த நம்பரை அதிஷ்ட எண்ணாக கருதுகிறார். எந்த போட்டியாக இருந்தாலும் ஜெர்சியில் எண் 3-ஐ தேர்ந்தெடுக்க செய்வாராம்
Image Source: instagram-com/harbhajan3
ஹர்பஜனின் புனைப்பெயரான 'பாஜி' அவருடன் விளையாடிய Nayan Mongia-வால் உருவாக்கப்பட்டது. முழு பெயரை சொல்ல கஷ்டமாக இருந்ததால் அப்படி அழைத்துள்ளார். காலப்போக்கில் பாஜி பெயர் ட்ரெண்டானது. தற்போது பாஜி பெயரில் சொந்தமாக ஸ்போர்ட்ஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் வைத்துள்ளார்
Image Source: instagram-com/harbhajan3
2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றியை தொடர்ந்து, ஹர்பஜன் சிங்கிற்கு பஞ்சாப் முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்க முன்வந்தார். ஆனால், கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பால் டிஎஸ்பி பதவியை ரிஜெக்ட் செய்தார்
Image Source: instagram-com/harbhajan3
2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹாட் ட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர். 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதுதவிர, 2010ல் நியூசிலாந்து எதிராக 8வது நபராக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார்
Image Source: instagram-com/harbhajan3
மார்ச் 2022ல், பஞ்சாப்பை சேர்ந்த ஐந்து வேட்பாளர்களில் ஒருவராக, ஹர்பஜன் சிங்கை ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபாவிற்கு பரிந்துரைத்தது. அவர் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Image Source: instagram-com/harbhajan3
ஹர்பஜன் சிங் இதுவரை 4 திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்
Image Source: instagram-com/harbhajan3
Thanks For Reading!