Aug 19, 2024
துலீப் டிரோப்பி (Duleep Trophy) எனப்படுவது இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு (பிராந்திய) கிரிக்கெட் போட்டி ஆகும். முதல் தர கிரிக்கெட் போட்டியான இது 1961-62 முதல் நடைப்பெற்று வருகிறது!
Image Source: twitter-com/bcci
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்தியர் குமார் சிரி துலீப்சிங்ஜீ அவர்களின் நினைவாக இந்த துலீப் டிரோப்பி கிரிக்கெட் போட்டிகள் 1961-ஆம் ஆண்டு துவங்கி நடத்தப்பட்டு வருகிறது!
Image Source: twitter-com
ஆரம்ப காலத்தில் இந்த துலீப் டிரோப்பி போட்டிகள் ஆனது இந்தியாவின் பல்வேறு புவியியல் மண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களாக பிர்த்து விளையாடப்பட்டது!
Image Source: twitter-com
வடக்கு, கிழங்கு, மத்திய மேற்கு, வட-கிழக்கு மற்றும் தெற்கு மண்டலம் என 6 மண்டலமாக அணிகள் பிரிக்கப்பட்ட நிலையில்; தெற்கு மண்டலத்தில் தமிழகம், கர்நாடகம், கோவா, ஆந்திரா, ஐதராபாத், பாண்டிச்சேரி, கேரளா வீரர்கள் இடம்பெற்றனர்.
Image Source: twitter-com
துலீப் டிரோப்பியில் இடம்பெறும் ஒவ்வொரு மண்டல அணியும் இந்தியாவின் அந்த பகுதியில் அமைந்துள்ள ரஞ்சி டிராபி மாநில/நகர அணிகளுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் கூட்டு அணியாக அமைந்திருந்தது!
Image Source: twitter-com
குறிப்பிட்ட இந்த மண்டல அணிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, மண்டல அணிகளுடன் கூடுதலாக வெளிநாட்டு அணி ஒன்றை அழைத்து விளையாடுவது என வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் போட்டியாகவே துலீப் டிரோப்பி (2009-10 வரையில்) இருந்தது. பின் இந்த வழக்கம் கைவிடப்பட்டது!
Image Source: twitter-com
துலீப் டிரோப்பி போட்டிகள் ஆனது BCCI-ன் வசதிக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது ஒரு சில மாற்றங்களுடன் (அணிகளின் எண்ணிக்கை, வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு போன்றவற்றுடன்) நடத்தப்பட்டு வருகிறது!
Image Source: twitter-com
அந்த வரிசையில் எதிர்வரும் 2024-25 ஆண்டுக்கான தொடரில், பிராந்திய அடையாளத்தை அழித்து, நாடெங்கிலும் உள்ள 60 வீரர்களை தேர்வு செய்து - அணிக்கு 15 வீரர்கள் என 4 அணிகளாக பிரித்து தொடரை நடத்தவுள்ளது.
Image Source: twitter-com
துலீப் டிரோப்பியில் பிராந்திய வீரர்களுக்கான முன்னுரிமை தவிர்க்கப்படும் நிலையில், தேசிய அணியில் அவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படும். அதாவது, தெற்கு மண்டலத்தில் தென் மண்டலத்தை (தமிழகம், கர்நாடகா, கேரளா...) சேர்ந்த வீரர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படும் அவலம் ஏற்படும்!
Image Source: twitter-com
Thanks For Reading!