[ad_1] Horror விரும்பிகள் பார்க்க வேண்டிய சிறந்த K-Dramas!

Horror விரும்பிகள் பார்க்க வேண்டிய சிறந்த K-Dramas!

Pavithra

Jun 11, 2024

Horror K-Dramas!

இளைஞர்கள் மத்தியில் கொரியன் நாடகங்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரியன் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஹாரர் நாடகங்கள் சிலவற்றை குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

The Glory

The Glory

உண்மை நிகழ்வைத் தழுவிய இந்த கதை சக மாணவர்களின் கொடுமைப்படுத்தலினால் பள்ளியை விட்டு வெளியேறிய நாயகி, பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் கொடுமைக்கார கூட்டத்தை வெறித்தனமாக பழிவாங்குவதை சொல்கிறது.

Image Source: instagram-com

Happiness

திருமண வாழ்வை புதிய குடியிருப்பில் தொடங்கும் நாயகனும் நாயகியும், அங்குப் பரவும் புதிய தொற்று காரணமாக சந்திக்கும் சவால்களையும், உயிர் பிழைக்க எடுக்கும் முயற்சிகளையும் திக் திக் நிமிடங்களுடன் சொல்வதே கதை.

Image Source: instagram-com

Oh my Ghost

தன் இறப்பிற்கு காரணமானவரைத் தேடும் ஆவிக்கு உதவும் நாயகி, நாயகன் மீதான நாயகியின் ஒருதலை காதலுக்கு உதவும் ஆவி. இதை திகில் திருப்பங்களோடும் நகைச்சுவையோடும் சொல்வதே கதை.

Image Source: instagram-com

Bring it on Ghost

ஆவியாக அலையும் நாயகி, ஆவிகளைப் பார்க்கும் திறன் கொண்ட நாயகனின் உதவியோடு தனது கடந்த காலம் பற்றி அறிய முயல்கிறாள். இடையில் வில்லன், பல்வேறு பேய்கள் எனக் கதை விறுவிறுப்பாக நகரும்.

Image Source: instagram-com

Suspicious Partner

கொலை வழக்கில் கைதான நாயகியைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞர் நாயகன். இருவரும் சேர்ந்து உண்மை குற்றவாளியைத் தேடுவதைப் பல திருப்பங்களுடன் கூறுவதே கதை.

Image Source: instagram-com

All of us are dead

உயர்நிலைப் பள்ளியில் ஜாம்பி வைரஸ் பரவுகிறது, மாணவர்கள் உயிருடன் தப்பிக்கிறார்களா அல்லது வெறித்ததுமான ஜாம்பிகளாக மாறுகிறார்களா என்பதை ஹாரர் கலந்து சொல்வதே கதை.

Image Source: instagram-com

Hotel Deluna

பன்னாட்டு ஹோட்டல் நிறுவனத்தின் சபிக்கப்பட்ட ஆவி CEO-வாக நாயகி, தனது தந்தை செய்த ஒப்பந்தத்தால் ஆவிகளுக்கான ஹோட்டலை நிர்வகிக்கும் நாயகன். விசித்திரமான ஆவி உலகத்தை அழகாகக் காட்டும் கதை.

Image Source: instagram-com

A Korean Odyssey

ஆவிகளைப் பார்க்கும் திறன் கொண்ட நாயகி, செய்த தவறுக்காக சொர்க்கத்தால் தண்டிக்கப்பட்ட நாயகன். அமானுஷ்யங்களிடம் இருந்து தப்பிக்க நாயகிக்கு ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாயகன் உதவுவதே கதை.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: 'பேசும்படம்' முதல் 'A சான்றிதழ்' வரை - இந்திய சினிமாவின் 'முதல் 8' மைல்கல்

[ad_2]