Jul 24, 2024
உலகெங்கும் உள்ள மக்கள் அதிகம் விரும்பி பருகும் புத்துணர்ச்சி பானமாக காபி பார்க்கப்படும் நிலையில், இந்த காபி பருகுவதன் நன்மை மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்த காபி எது? என்பது குறித்தும் இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
Hot Coffee எனப்படுவது வறுத்து அரைத்த காபி கொட்டைகளை கொதிக்க வைத்த பால் மற்றும் தண்ணீருடன் சேர்த்து உண்டாக்கப்படுவது. அதேநேரம் Cold Coffee எனப்படுவது அறை வெப்பநிலையில் (அ) குளிர்சாதன பெட்டியில் 18 - 24 மணி நேரம் வரை பதப்படுத்தி தயார் செய்யப்படும் குளிர்ந்த காபி!
Image Source: istock
Hot Coffee, Cold Coffee ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதில் உள்ள காஃபின் அளவு தான். Hot Coffee-ல் காஃபின் அதிகமாகவும், Cold Coffee-ல் குறைவாகவும் இருக்கும். இதை தவிர்த்து இதன் தயாரிப்பு நேரம் பெருமளவு மாறுபடுகிறது!
Image Source: istock
Cold Coffee உடன் ஒப்பிடுகையில் Hot Coffee-ல் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. புற்றுநோய், மாரடைப்பு, வகை - 2 நீரிழிவு போன்ற ஆபத்துக்களை தடுக்க ஆன்டி ஆக்ஸிடன்களின் பங்களிப்பு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது!
Image Source: istock
ஆய்வுகளின் படி சூடான (Hot) காப்பிகள் மன நலனை மேம்படுத்த உதவகிறது. அந்த வகையில் மன அழுத்தம் / மனக்கவலை உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கி உங்களை உத்வேகத்துடன் வைத்துக்கொள்ள Hot Coffee உதவுகிறது!
Image Source: istock
சூடான (Hot) காபியில் காணப்படும் மிகுதியான காஃபின் உள்ளடக்கம் உண்மையில் உத்வேகம் அளிக்கும் ஒரு சேர்மம் ஆகும். அந்த வகையில் இந்த சூடான காபியின் நுகர்வு ஆற்றல் இழப்பை தடுப்பதோடு உடல் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது!
Image Source: istock
அதேநேரம் குளிர்ந்த (Cold) காபியில் காணப்படும் குறைவான காஃபின் உள்ளடக்கம் ஆனது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தடுக்கிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது!
Image Source: istock
குறைந்தளவு காஃபின் உள்ளடக்கம் கொண்ட இந்த குளிர்ந்த (Cold) காபியில் போதுமான அளவு மெக்னீசியம், பாலிபினால் உள்ளடக்கங்கள் காணப்படுகிறது. இது, சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்ய உதவுகிறது!
Image Source: istock
சூடான காபியுடன் ஒப்பிடுகையில் குளிர்ந்த காபியில் உடல் எடையை பராமரிக்கும் பண்பு அதிகம் காணப்படுகிறது. சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்யும் இந்த காபி, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!