Jul 4, 2024
நடந்த முடிந்த WC T20 2024 தொடருக்கு பின், ICC தரவரிசை பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், T20 பேட்ஸ்மேன்களுக்கான ICC தரவரிசை பட்டியலில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: x-com/icc
T20 உலக கோப்பை தொடரில் 42.50 சராசரியில் 255 ரன்கள் குவித்து, ஆஸ்திரேய அணியின் வெற்றியை பலமுறை உறுதி செய்த Travis HEAD, T20 பேட்ஸ்மேன்களுக்கான ICC தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
Image Source: x-com/icc
T20 உலக கோப்பை தொடரில் 2 அரை சதங்களை பதிவு செய்திருப்பினும், சூர்ய குமார் யாதவால் தனது முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. 838 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-ஆம் இடத்திற்கு சென்றுள்ளார்!
Image Source: x-com/icc
T20 உலக கோப்பை தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் Phil SALT, 797 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்
Image Source: x-com/icc
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் ஆசாம், டி20 உலக கோப்பை தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக இவர் இப்பட்டியலில் 755 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளார்.
Image Source: x-com/icc
T20 பேட்ஸ்மேன்களுக்கான ICC தரவரிசை பட்டியலில் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகமது ரிஸ்வான் 746 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.
Image Source: x-com/icc
T20 உலக கோப்பை தொடரில் USA அணிக்கு எதிரான போட்டியில் 83* ரன்கள் குவித்த அதிரடி நாயகன் Jos BUTTLER; 716 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
Image Source: x-com/icc
T20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-க்கு களத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் 659 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து TOP 10 பட்டியலுக்குள் உள்ளார்!
Image Source: x-com
T20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் Brandon KING & Johnson CHARLES தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முறையே 656 & 655 புள்ளிகளுடன் 8 மற்றும் 9-ஆம் இடத்தை பிடித்துள்ளனர்!
Image Source: x-com/icc
Thanks For Reading!