Jul 9, 2024
கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கி 2024-ஆம் ஆண்டு வரையில் நடைப்பெற்ற IPL தொடர்கள் அனைத்திலும் பங்கேற்ற வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்!
Image Source: twitter-com
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 140 போட்டிகளில் வழிநடத்திய விராட் கோலி, 2008-ஆம் ஆண்டு துவங்கி 2024-ஆம் ஆண்டு வரையில் RCB அணியில் பயணித்து வருகிறார்!
Image Source: twitter-com
ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோகிஷ் ஷர்மா, தனது IPL பயணத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் துவங்கினார். பின் 2011 மெகா ஏலத்தில் மும்பை அணிக்கு இடம்பெயர்ந்த இவர், 2024 தொடர் வரையில் MI அணியில் விளையாடியுள்ளார்.
Image Source: twitter-com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி; 2008-ஆம் ஆண்டு துவங்கி 2024 வரையில் அனைத்து IPL தொடரிலும் பங்கேற்றுள்ளார். இடையில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் RPS அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Image Source: twitter-com
IPL தொடரின் அனைத்து தொடர்களிலும் பங்கேற்ற வீரரான தினேஷ் கார்த்திக் மொத்தம் 6 அணிகளில் விளையாடியுள்ளார். 2008-ஆம் ஆண்டு டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியில் துவங்கி பின் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், KKR, RCB என 2024 வரையில் தனது IPL பயணத்தை தொடர்ந்தார்.
Image Source: twitter-com
2008-ஆம் ஆண்டு MI அணியில் தனது IPL பயணத்தை தொடங்கிய மனீஷ் பாண்டே, தொடர்ந்து RCB (2009–10), PW (2011–13), KKR (2014–17), SRH (2018–21), LSG (2022), DC (2023) பின் மீண்டும் KKR (2024) என மொத்தம் 7 IPL அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
Image Source: twitter-com
2008-ஆம் ஆண்டு MI அணியில் தனது IPL பயணத்தை தொடங்கிய சாகா, தொடர்ந்து CSK (2011–13), KXIP (2014–17), SRH (2018–21) மற்றும் GT (2022-24) வரையில் என அனைத்து IPL-ன் அனைத்து தொடரிலும் பங்கேற்றுள்ளார்.
Image Source: twitter-com
2008-ஆம் ஆண்டு டெல்லி அணியுடன் தனது IPL பயணத்தை துவங்கிய தவான், பின் MI (2009-10), டெக்கன் சார்ஜர்ஸ் (2011-12), SRH (2013-18), டெல்லி கேப்பிடல்ஸ் (2019-21), பஞ்சாப் கிங்ஸ் (2022-24) என அனைத்து IPL தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.
Image Source: twitter-com
CSK (2008-15), RPS (2016-17), KXIP (2018-19), DC (2020-21), RR (2022-24) என அனைத்து IPL தொடரிலும் பங்கேற்ற ஒரு வீரராக அஸ்வின் உள்ளார். இருப்பினும் இவருக்கு, 2008-ஆம் ஆண்டு களத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
Image Source: twitter-com
Thanks For Reading!