May 21, 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 5 ஆட்டங்களில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்
Image Source: instagram-com/sameer_rizvi_786
ஆர்சிபி அணி, வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் ரன்களை அள்ளிக்கொடுத்தது மட்டுமின்றி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை
Image Source: instagram-com/alzarri_08
சிஎஸ்கே அணியின் சிறந்த பவுலரான தீபக் சாஹர், ஐபிஎல் 2024ல் பெரிதாக ஜொலிக்கவில்லை. அவர் விளையாடிய 8 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தார். அவர் ரூ.14 கோடிக்கு Retain செய்யப்பட்டிருந்தார்
Image Source: instagram-com/deepak_chahar9
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரோன் ஹெட்மியர், ஐபிஎல் 2024 சீசனில் 10 ஆட்டங்கள் விளையாடிய போதும் 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரை 8.5 கோடிக்கு ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் எடுத்திருந்தது
Image Source: instagram-com/shetmyer
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதிக்கு பெரிதாக இடம் கிடைக்கவில்லை. அவர் விளையாடிய 2 ஆட்டங்களிலும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவர் ரூ.8.50 கோடிக்கு Retain செய்யப்பட்டிருந்தார்
Image Source: instagram-com/tripathirahul52
மயங்க் அகர்வால், ஐபிஎல் 2024ல் ஜொலிக்க தவறினார். அவர் விளையாடிய 4 போட்டிகளில் 64 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அவரை சன் ரைசர்ஸ் ரூ.8.25 கோடிக்கு Retain செய்திருந்தது
Image Source: instagram-com/mayankagarawal
பஞ்சாப் அணியின் ஸ்டார் வீரராக எதிர்ப்பார்க்கப்பட்டவர் ரிலீ ரொசோ. அவர் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பபட்டிருந்தார். ஆனால், 7 போட்டிகளில் பங்கேற்ற போதும் 162 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
Image Source: instagram-com/rr_rileerossouw
ஐபிஎல் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் படிக்கல், 38 ரன்கள் மட்டுமே குவித்தார். அவர் 7.75 கோடிக்கு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
Image Source: instagram-com/devpadikkal19
ஐபிஎல் 2024-ல் மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தவர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே. அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.6.50 கோடிக்கு Retain செய்தது. ஆனால், 6 போட்டிகளில் பங்கேற்ற நோர்ட்ஜே, வெறும் 7 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். அவரது எகானமி ரேட் 13.36 ஆகும்
Image Source: instagram-com/anrich_nortje
Thanks For Reading!