May 22, 2024
ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் ஆர்சிபி நுழைந்துள்ள நிலையில், கடந்த சீசன்களில் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபியின் வரலாறு பற்றி இங்கு காணலாம்
Image Source: instagram-com
ஆர்சிபி இதுவரை பிளே ஆப் போட்டிகளில் 15 முறை விளையாடியுள்ளது. அதில் 6 முறை வெற்றியும், 9 முறை தோல்வியும் சந்தித்துள்ளது. வெற்றி பெற்ற போட்டிகளில் 3 முறை பர்ஸ்ட் பேட்டிங்கும், 3 முறை சேசிங்கும் செய்துள்ளது
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
2022ல் கொல்கத்தாவில் நடந்த Eliminator போட்டியில் LSG அணிக்கு எதிரான போட்டியல் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. இது பிளே ஆப் சுற்றில் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
2020ல் அபு தாபியில் நடந்த போட்டியில் SRH அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. இதுவே பிளே ஆப் போட்டியில் ஆர்சிபியின் குறைந்தப்பட்ச ரன்கள் ஆகும்
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
2016ம் ஆண்டு பெங்களூருவில் குஜராத் லையன்ஸ் எதிரான போட்டியில் 159 ரன் டார்கெட்டை வெறும் 18.2 ஓவர்களில் ஆர்சிபி சேசிங் செய்தது. இது பிளே ஆப் சுற்றில் ஆர்சிபியின் அதிகப்பட்ச சேசிங் ஸ்கோர் ஆகும்
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
2015-ல் புனேவில் நடந்த Elimination சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 180 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், ஆர்ஆர் அணியை 109 ரன்களில் சுருக்கி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
பிளே ஆப் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 308 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஏபி டி வில்லியர்ஸ் 9 ஆட்டங்களில் 268 ரன்கள் எடுத்துள்ளார்
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
பிளே ஆப் சுற்றில் எஸ்.அரவிந்த் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சாஹல் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Image Source: instagram-com/sreenath_arvind
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை 3 முறை பைலனுக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. மூன்று போட்டிகளிலும் ஆர்சிபி சேசிங் தான் செய்திருந்தது.
Image Source: instagram-com/royalchallengers-bengaluru
Thanks For Reading!