[ad_1] Kollywood-ன் புதிய Crush ‘நிகிலா விமல்’ பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

Kollywood-ன் புதிய Crush ‘நிகிலா விமல்’ பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

mukesh M, Samayam Tamil

Jul 11, 2024

நிகிலா விமல்!

வெற்றிவேல் (2016), கிடாரி (2016) உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகை நிகிலா விமல். Kollywood ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த நிகிலா விமல் பற்றி பலரும் அறியாத தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

கலை குடும்பதை சேர்ந்தவர்!

கலை குடும்பதை சேர்ந்தவர்!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிப்பறம்பா பகுதியில் 1994-ஆம் ஆண்டு பிறந்த நிகிலா-வின் தாய் ஒரு பாரம்பரிய நடன கலைஞர் ஆவார். அவரது அக்கா அகிலா விமல், ஒரு நாடக கலைஞர் ஆவார்.

Image Source: instagram-com

தாயை போல் நடனம் கற்றவர்!

தனது தாயை போல் பாரம்பரிய நடனம் கற்க விரும்பிய நிகிலா; பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் கதகளியில் இருந்து உருவான கேரளா நடனத்தை கற்று தேர்ந்தவர்.

Image Source: instagram-com

தாவரவியல் மாணவி!

தன் குடும்பதினர் போன்று கலை துறையில் ஆர்வம் காட்டிய அதேநேரம், படிப்பிலும் சிறப்பாக செயல்பட்டார் நிகிலா. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தாவரவியல் பிரிவில் தனது இளங்கலை பட்டம் வென்றார்.

Image Source: instagram-com

சினிமா அறிமுகம்?

நாட்டியத்தில் கவனம் செலுத்தி வந்த நிகிலாவுக்கு தனது 15-வது வயதில் சினிமா துறையில் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2009-ஆம் ஆண்டு வெளியான பாக்யதேவதை எனும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Image Source: instagram-com

காந்திருந்த நாயகி வாய்ப்பு!

பாக்யதேவதை திரைப்படத்திற்கு பின் படிப்பில் கவனம் செலுத்திய நிகிலாவுக்கு 2015-ஆம் ஆண்டு வெளியான Love 24x7 எனும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source: instagram-com

தமிழில் குவிந்த வாய்ப்புகள்!

மலையாளத்தில் நாயகியாக அறிமுகமான அடுத்த ஆண்டே தமிழில் வெற்றிவேல் (2016) எனும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து கிடாரி, பஞ்சு மிட்டாய், தம்பி போன்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

Image Source: instagram-com

இணைய தொடர்களில் நடித்தவர்!

திரைப்படங்களுக்கு இடையே இணையத்தொடர்களிலும் நடிக்க துவங்கிய நிகிலா விமல், மதகம் (2023), பேரிலூர் பிரீமியர் லீக் (2024) போன்ற தொடர்களில் நடித்து மலையாளம் அல்லாத மாற்று மொழி ரசிகர்களையும் ஈர்த்தார்!

Image Source: instagram-com

தொகுப்பாளினி அவதாரம்!

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக தொலைக்காட்சி படங்களில் நடிக்க துவங்கிய நிகிலா, 2016-ஆம் ஆண்டு பிரபல மலையாள தொலைக்காட்சில் ஒளிப்பரப்பான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: கமல், ஷங்கர் படைப்பான 'இந்தியன்' படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]