May 6, 2024
நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வரும் நவநாகரீக உலகில் பலரும் படிகட்டை தவிர்த்து, Lift-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த Lift-ஐ தவிர்த்து படிக்கட்டு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்.
Image Source: istock
தினசரி வாழ்வில் Lift-ஐ தவிர்த்து படிக்கட்டு பயன்படுத்துவது மாரடைப்பு உண்டாவதன் வாய்ப்பை 24% வரை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதய ஆரோக்கியம் காப்பது மட்டும் அல்லாது பல்வேறு நன்மைகளையும் இது அளிக்கிறது.
Image Source: istock
படிக்கட்டில் ஏறும் போது மேம்படும் இதய இயக்கம் ஆனது இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இதய ஆரோக்கியம் காத்து மாரடைப்பு உண்டாவதன் வாய்ப்பை குறைக்கும்.
Image Source: istock
மாரடைப்பு ஏற்படுவதன் மிக முக்கிய காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கெட்ட LDL கொலஸ்ட்ரால் தான். படிக்கட்டை தவறாது பயன்படுத்துவது, இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியம் காக்கிறது.
Image Source: istock
நீரிழிவு மற்றும் மாரடைப்பு உண்டாக்கும் ஒரு முக்கிய காரணமாக உடல் பருமன் பிரச்சனை பார்க்கப்படும் நிலையில், Lift-ஐ தவிர்த்து படிக்கட்டு பயன்படுத்துவது ஆரோக்கிய உடல் எடையை பராமரித்து மாரடைப்பு உண்டாகும் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: pexels-com
தினசரி படிக்கட்டில் ஏறுவதை வழக்கமாக்கிக்கொள்வது உடலில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும். மேலும், சுவாச மண்டல ஆரோக்கியம் காத்து, சீரான சுவாச செயல்பாட்டினை உறுதி செய்யும்
Image Source: istock
Lift-ஐ தவிர்த்து படிக்கட்டு பயன்படுத்துவது தசைகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, மூட்டுவலி - தசைப்பிடிப்புகள் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.
Image Source: istock
Lift-ஐ தவிர்த்து படிக்கட்டு பயன்படுத்து இதய ஆரோக்கியம் காப்பதோடு, மன ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. அதாவது, படிகட்டை பயன்படுத்தும் போது உடலில் உண்டாகும் இயக்கங்கள் மன ஆரோக்கியம் காப்பதில் உதவி செய்கிறது.
Image Source: istock
படிகட்டுகளை பயன்படுத்தி உங்கள் உடல் இயக்கத்தை உறுதி செய்வது என்பது வழக்கமான வேலைகளின் போது உண்டாகும் ஆற்றல் இழப்பை எதிர்த்து போராட உதவுகிறது. அந்த வகையில் இது ஆற்றல் இழப்பை ஈடு செய்ய உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!