Jun 11, 2024
By: mukesh MLow Grade காய்ச்சல் எனப்படுவது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளுடன் - குறைந்த வெப்பநிலையில் குழந்தைகளை காக்கும் ஒரு காய்ச்சல் ஆகும். அதாவது, 37.5°C - 37.9°C இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும் ஒரு மித வெப்பநிலை காய்ச்சல் ஆகும்.
Image Source: pexels-com
சுவாச நோய் தொற்றுகள், சிறுநீர் பாதை தொற்றுக்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், வானிலை மாற்றங்கள், புற்றுநோய், மன அழுத்தம், காச நோய், மூளைக்காய்ச்சல் அல்லது நாள்பட்ட நோய்கள் என பலவற்றின் காரணமாக இந்த Low Grade காய்ச்சல் குழந்தைகளை தாக்க கூடும்.
Image Source: istock
சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகும். நமது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் இது போன்ற வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க முற்படும்போது Low Grade காய்ச்சல் ஏற்படுகிறது.
Image Source: istock
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய் மற்றும் சிறுநீர்பை பகுதிகளில் பாக்டீரியா தொற்று தாக்கும் போது இந்த Low Grade காய்ச்சல் உண்டாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
Image Source: istock
குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கொடுக்கும்போது Low Grade காய்ச்சல் ஏற்படுகிறது. இது போன்ற மருந்துகள் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்த உதவுகிறது. எனவே தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்கு Low Grade காய்ச்சல் இருப்பது இயல்பானது.
Image Source: istock
குழந்தைகளுக்கு Low Grade காய்ச்சல் தொடர்ந்து 7 - 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
Image Source: istock
குழந்தைகளுக்கு அடிக்கடி Low Grade காய்ச்சல் ஏற்படுவது காச நோயின் அறிகுறியாக இருக்கலாம். 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் இது பொதுவாக ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. காச நோயும் காற்றின் மூலம் பரவும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும்.
Image Source: istock
Low Grade காய்ச்சல் ஏற்படுவதற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் மூளையில் ஏற்படும் அழற்சி ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி லேசான காய்ச்சல் இருந்தால் அது மூளை காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Image Source: istock
சிறுநீர் கழிக்கும் போது வலி, நீர் சத்து குறைபாடு, தலைவலி, உடல் வலி, சோர்வான கண்கள், தொண்டை வறட்சி, பசியின்மை போன்றவை இந்த Low Grade காய்ச்சல் அறிகுறியாக இருக்கும் நிலையில், குறித்த இந்த அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!