[ad_1] Monkeypox வைரஸ் தொற்றை தடுக்க உதவும் வழிகள்!

Aug 22, 2024

Monkeypox வைரஸ் தொற்றை தடுக்க உதவும் வழிகள்!

mukesh M

Monkeypox என்றால் என்ன?

Monkeypox (குரங்கு அம்மை) எனப்படுவது அரிய வகை வைரஸ் தொற்று காய்ச்சல் ஆகும். தலைவலி, காய்ச்சல் எனும் சாதாரண அறிகுறிகளுடன் துவங்கி மனிதரின் உயிரை பலி கேட்கும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பது எப்படி? என இங்கு காணலாம்!

Image Source: istock

விலங்குகளுடனான தொடர்பை தவிர்த்தல்!

தகவல்கள் படி இந்த வைரஸ் தொற்று ஆனது மனிதர்களுக்கு கொரித்துண்ணிகள், பாலூட்டி விலங்குகளிடம் இருந்து பரவுகிறது. எனவே, குறிப்பிட்ட இந்த விலங்கினங்களிடம் இருந்து விலகி இருப்பது வைரஸ் தொற்று உண்டாவதன் வாய்ப்பை குறைக்கும்!

Image Source: istock

கை, கால்களை அடிக்கடி கழுவுங்கள்!

வைரஸ் தொற்றின் வாய்ப்புகளை குறைக்க கை, கால்களை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள் (அ) சானிடைசர் பயன்படுத்துங்கள். இதன் மூலம் கிருமிகள் - கண், வாய், மூக்கு போன்ற உடல் துவாரங்கள் வழியே உள் செல்வதை நாம் தடுக்கலாம்!

Image Source: pexels-com

தொற்று உள்ள நபரிடம் இருந்து விலகியிருங்கள்!

மனிதர்களிடம் இருந்து மனிதருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவும் நிலையில்; mpox வைரஸ் தாக்கிய மனிதர்களிடம் இருந்து தொடுதல் தொடர்பான தொடர்பை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

பொருட்களை பகிர்ந்துக்கொள்வது கூடாது!

படுக்கை - தலையணை, உடல் துவட்டும் துண்டு, ஆடைகள் போன்ற உடலுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பொருட்களை பிறருடன் பகிர்ந்துக்கொள்வது கூடாது.

Image Source: istock

ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் உடலுறவு?

ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் பாலுறவு கொள்வதை தவிர்க்கவும். அதேநேரம், உங்கள் வாழ்க்கை துணையுடன் பாதுகாப்பான உடலுறவை உறுதி செய்வது அவசியம்!

Image Source: istock

முகக்கவசம் அணியுங்கள்!

வைரஸ் தொற்று பாதித்த நபர், வைரஸ் தொற்றில் இருந்த தற்காத்துக்கொள்ள விரும்பும் நபர் என அனைவரும் முகக்கவசத்தை அணிவது, குறிப்பிட்ட இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உதவும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image Source: istock

கூட்டமான இடங்களை தவிர்க்கவும்!

மால், சந்தை போன்ற பொதுமக்கள் அதிகம் சேரும் இடங்களை தவிர்ப்பது நல்லது. காரணம், அதிக மக்கள் கூடும் இந்த இடங்களில், வைரஸ் தொற்று பரவுவதன் வாய்ப்பும் அதிகம்.

Image Source: istock

அலட்சியம் வேண்டாம்!

சரும சிவத்தல் - சொறி போன்ற பிரச்சனைகளுடன், சரும தடிப்பு, சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்டால் உடனடியாக உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவரை சந்திப்பது நல்லது. அலட்சியமாக இருப்பது, பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: வெறும் தரையில் அமரும் போது நம் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

[ad_2]