[ad_1] ‘Mood Swing காதலி-யை’ சமாளிக்க உதவும் எளிய வழிகள்!

‘Mood Swing காதலி-யை’ சமாளிக்க உதவும் எளிய வழிகள்!

May 21, 2024

By: mukesh M

‘Mood Swing காதலி’!

Mood Swing எனப்படுவது திடீர் மனமாற்றத்தை குறிக்கும் ஆங்கில வார்த்தை ஆகும். நொடிக்கு ஒரு முறை மனம் மற்றும் குணத்தை மாற்றிக்கொள்ளும் இந்த விசித்திர குணம் கொண்ட காதலியை சமாளிப்பது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: pexels-com

காரணம் என்ன?

உங்கள் காதலியின் இந்த திடீர் குண-மாற்றங்களை சமாளிக்க முயற்சிப்பதற்கு முன், அவரின் இந்த குண மாற்றத்திற்கு காரணம் என்ன? என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். காரணத்தை அறிந்தால், பிரச்சனைக்கு பாதி தீர்வு கிடைக்கும்!

Image Source: istock

உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள்!

உங்கள் காதலியின் விருப்ப வெறுப்புக்கு மதிப்பு அளிக்காத போதே இத்தகைய மன மாற்றத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். எனவே, அவரது உணர்வுக்கு மதிப்பு அளிக்க முயற்சிப்பது, இந்த ‘Mood Swing’ பிரச்சனைக்கு தீர்வு காண உதவும்!

Image Source: istock

உதவி செய்யுங்கள்!

தனிப்பட்ட பிரச்சனைகள் - வருத்தங்கள் காரணமாகவும் பெண்கள் இந்த திடீர் உணர்வு மாற்றங்களை வெளிப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் அவருடன் மனம் விட்டு பேசுவதோடு, அவருக்கு உதவ முயற்சிப்பதும் அவசியம்!

Image Source: istock

பொறுமை அவசியம்!

இந்த ‘Mood Swing’ காரணமாக உங்கள் காதலி தனது திடீர் கோபத்தை வெளிப்படுத்தினால், நீங்களும் பதிலுக்கு கோபத்தை வெளிப்படுத்தாமல், பொறுமையாகவும் - அமைதியாகவும் நடந்துக்கொள்வது அவசியம்!

Image Source: istock

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்!

‘Mood Swing’ காரணமாக உங்கள் காதலி செய்யும் விஷயங்கள் அனைத்தும் உங்களை நோக்கி செய்யும் விஷயமே என தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். வேறு யார் மீது உள்ள கோபத்தை அவர் உரிமையில் உங்கள் மீது காட்ட கூடும்!

Image Source: istock

தனிமையை அனுமதியுங்கள்!

உங்கள் காதலியின் இந்த திடீர் உணர்வு மாற்ற பிரச்சனையை சமாளிக்க, அவரை போதுமான நேரம் தனிமையில் இருக்க அனுமதியுங்கள். அதாவது, அவரது மன அமைதிக்கு தேவையான தனிமையை அளிப்பதும் அவசியம்!

Image Source: istock

மனம் விட்டு பேசுங்கள்!

உங்கள் காதலியின் இந்த திடீர் உணர்வு மாற்றங்களை சமாளிக்க அவருடன் மனம் விட்டு பேசுவது அவசியம். அதாவது, அவரது பிரச்சனைகள் என்ன? தேவைகள் என்ன? அவரது விருப்பத்தை நிறைவேற்ற, நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்று மனம் விட்டு பேசுங்கள்!

Image Source: istock

நிபுணர் உதவி நாடுங்கள்!

உங்கள் காதலியின் இந்த திடீர் உணர்வு மாற்ற பிரச்சனையை சமாளிக்க உளவியல் நிபுணரின் உதவியை நாடுவது நல்லது. முடிந்தளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுவது, எதிர்வரும் பெரிய பிரச்சனைகளை தவிர்க உதவியாக இருக்கும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: கர்ப்ப காலத்தில் ‘சோடா’ பருகுவது நல்லதா? கெட்டதா?

[ad_2]