[ad_1] NEET போன்றே உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் மருத்துவ தேர்வுகள்!

Jul 11, 2024

NEET போன்றே உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் மருத்துவ தேர்வுகள்!

mukesh M

NEET மாதிரியான தேர்வுகள்!

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வான NEET தேர்வு போன்றே உலகின் பிற இடங்களில் நடத்தப்படும் கடினமான மருத்து துறை தொடர்பான தேர்வுகள் குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

MCAT!

MCAT (Medical College Admission Test) எனப்படுவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கணினி அடிப்படையிலான நுழைவுத் தேர்வு ஆகும்.

Image Source: pexels-com

FMGE!

FMGE (Foreign Medical Graduates Examination) - வெளிநாடு சென்று மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாக இந்த FMGE தேர்வு பார்கப்படுகிறது. NBE-ஆல் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் இவர்களால் இந்தியாவில் மருத்துவம் பயிற்சி செய்ய முடியும்!

Image Source: pexels-com

FPMT!

FPMT (Foreign Pre-Medical Entrance Test) - MBBS/MD போன்ற மருத்துவம் சாரந்த படிப்பை படிக்க துவங்கும் முன்; உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலம் பாடம் தொடர்பான மாணவர்களின் அறிவை மதிப்பிடுவதற்கு FPMT தேர்வு நடத்தப்படுகிறது.

Image Source: pexels-com

USMLE!

USMLE (United States Medical Licensing Examination) - அமெரிக்காவில் மருத்துவ உரிமத்திற்கான மூன்று-படி தேர்வுத் திட்டமாகா இது பார்க்கப்படுகிறது. மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது!

Image Source: pexels-com

CMSE!

Combined Medical Services Examination (CMSE) எனப்படுவது இந்திய அரசின் கீழ் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக மருத்துவ பட்டதாரிகளை தேர்வு செய்யும் UPSC-ஆல் நடத்தப்படும் ஒரு போட்டி தேர்வு ஆகும்!

Image Source: pexels-com

GRE!

Graduate Record Examination (GRE) எனப்படுவது அமெரிக்கா அல்லது கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு ஆகும். மாணவர்களின் வாய்மொழி, கணிதம் மற்றும் பொது பகுப்பாய்வு திறன்களை அளவிட இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

Image Source: pexels-com

Australia – AMC!

ஆஸ்திரேலியாவில் பயிற்சி உரிமம் பெற, அனைத்து மருத்துவ பட்டதாரிகளும் எழுதவேண்டிய ஒரு தேர்வாக Australian Medical Council (AMC) தேர்வு பார்க்கப்படுகிறது.

Image Source: pexels-com

PLAB Exam!

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு இங்கிலாந்தில் மருத்துவம் செய்ய உரிமம் அளிக்கும் ஒரு தகுதி தேர்வாக இந்த PLAB Exam பார்க்கப்படுகிறது!

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: நீட் பயிலும் மாணவர்கள் நம்பவே கூடாத கட்டுக்கதைகள் என்ன தெரியுமா?

[ad_2]