Jul 17, 2024
By: mukesh MOrganic (ஆர்கானிக்) உணவு பொருட்கள் எனப்படுவது மனிதர் கண்டுபிடிப்புகளான பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை வழியில் விவாசாயம் செய்து உண்டாக்கப்படும் உணவு பொருட்கள் ஆகும்!
Image Source: unspalsh-com
ஆரோக்கியமான வாழ்வுக்கு இந்த ஆர்கானிக் உணவுகள் தான் நல்லது என இளம் தலைமுறையினர் பலரும், ஆர்கானிக் காய்கறி சந்தைகளின பின் ஓடும் நிலையில், இந்த ஆர்கானிக் உணவுகள் தொடர்பாக நம்பப்படும் கட்டுகதைகள் மற்றும் அதன் உண்மை நிலை பற்றி இங்கு காணலாம்!
Image Source: unspalsh-com
இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் இந்த Organic உணவு பொருட்கள் 100% சுத்தமானது என பலரும் நம்பும் நிலையில், நிலத்தில் இருந்து கிடைக்கும் எந்த ஒரு உணவு பொருளும் 100% சுத்தமானது அல்ல; 13 - 27% வரை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன!
Image Source: unspalsh-com
செயற்கை பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் தயார் செய்யப்படும் இந்த Organic பழங்கள் / காய்கறிகளில் விஷத் தன்மை இருக்காது என பலரும் நம்பும் நிலையில்; இயற்கை உரங்கள் காரணமாகவும இந்த பழங்கள் / காய்கறிகளில் விஷத் தன்மை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Image Source: pexels-com
செயற்கை உரம் விவசாயத்தில் கிடைக்கும் உணவு பொருட்களை காட்டிலும், இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் உணவு பொருட்கள் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கும் என பலரும் நம்பும் நிலையில்; இரண்டிற்கு இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அதிகம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்!
Image Source: unspalsh-com
Organic உணவு பொருட்களின் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் - உணவு பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அளிக்கப்படும் - தரச்சான்றுகள் இல்லை. எனவே, Organic எனும் ஸ்டிக்கர் இருப்பதால் மட்டும் உணவு பொருட்களை நம்பி வாங்குவது நல்ல ஒரு முடிவு அல்ல!
Image Source: unspalsh-com
Organic உணவு பொருட்கள் - கிருமி தொற்றுகளை உண்டாக்காது என பலரும் நம்பும் நிலையில், செயற்கை பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட உணவு பொருட்களை காட்டிலும் இந்த Organic உணவு பொருட்களின வழியாகவே கிருமி தொற்று அதிகம் உண்டாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Source: unspalsh-com
நிபுணர்கள் கூற்றுப்படி அனைத்து உணவுப் பொருட்களிலுன் Organic எனும் லேபிளை ஒட்ட முடியாது. காரணம், உப்பு போன்ற கடல் நீரில் கிடைக்கும் உணவு பொருட்களில் செயற்கை பொருட்களை சேர்த்தால் மட்டுமே உண்ண தகுந்த நிலைக்கு தயார் செய்ய முடியும்!
Image Source: unspalsh-com
நிபுணர்கள் கூற்றபடி இந்த Organic உணவுகள் உயிரை காக்கும் மருந்துகள் அல்ல; அதேநேரம், செயற்கை உரங்கள் வழியே உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவும் அல்ல. அதாவது, ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்காத ஒரளவுக்கு ஆரோக்கியமான உணவு பொருள்!
Image Source: unspalsh-com
Thanks For Reading!