Aug 1, 2024
பிரேசில் நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனை, ஒழுங்கின நடவடிக்கைகளுக்காக பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரை பற்றியும், அவரை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தையும் இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/_anavieeiraa
பிரேசிலில் Sao Paulo நகரில் 2001ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்தார் அனா கரோலினா வியேரா. இவர் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடரில் பங்கேற்று 12வது இடத்தை பிடித்தார்
Image Source: instagram-com/_anavieeiraa
கரோலினா வியேராவின் நீச்சல் பயணம், 2018ல் Jose Finkel டிராபியில் தான் தொடங்கியுள்ளது. 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடரில் தென் அமெரிக்காவின் சாதனையை முறியடித்து தனது திறமையை நாட்டிற்கு நிரூபித்தார்
Image Source: instagram-com/_anavieeiraa
2018ல் யூத் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடர் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை புரிந்தார். பிரேசில் பெண் அணி, சர்வதேச சாம்பியன்ஷிப் ரிலேயில் பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
Image Source: instagram-com/_anavieeiraa
கரோலினா வியேரா, World Aquatics சாம்பியன்ஷிப்பில் 2 முறை பங்கேற்றுள்ளார். 2022 மற்றும் 2024ல் 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தொடர் போட்டியில் 6வது இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து, பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் தனது இடத்தை உறுதி செய்தார்
Image Source: instagram-com/_anavieeiraa
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜூலை 27ம் தேதி நடந்த 4x100 மீட்டர் தகுதிச்சுற்றில் கரோலினா கலந்துகொண்டார். ஆனால், அப்போட்டி நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, அணியின் அனுமதியின்றி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து கரோலினா வெளியேறியுள்ளார்
Image Source: instagram-com/_anavieeiraa
இச்சம்பவம் பற்றி ஒலிம்பிக் குழுவினர் விசாரனை நடத்திட, கரோலினா தனது காதலரை சந்திப்பதற்காக வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காதலரை சந்தித்த புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Image Source: instagram-com/_anavieeiraa
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, தவறு செய்யவில்லை என கரோலினா வாதிட்டுள்ளார். இதன் காரணமாகவே, அவரை ஒழுங்கின நடவடிக்கையால் வெளியேற்றியுள்ளனர். அவருடன் சென்ற சக வீரரான கேப்ரியல் சான்டோஸ் மன்னிப்பு கோரியதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
Image Source: instagram-com/_anavieeiraa
கரோலினா சர்ச்சையில் சிக்குவது புதுசு கிடையாது. 2023ல் Trofeu Brasil போட்டியின் போது தனது நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர் கான்சிகாவோவுடன் தகராறு செய்து சலசலப்பை உண்டாக்கினார்
Image Source: instagram-com/_anavieeiraa
Thanks For Reading!