Aug 10, 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளின் மல்யுத்த விளையாட்டின் இறுதி போட்டிக்கு முன்னதாக (கூடுதல் எடை காரணமாக) தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேசு போகாட், 50Kg பிரிவை தேர்வு செய்து விளையாட காரணம் என்ன என்று இங்கு காணலாம்!
Image Source: instagram-com/vineshphogat
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் பின்னர் உடல் எடை மேலாண்மையில் சிரமங்களை எதிர்கொண்டு வந்த போகாட், 2018-ஆம் ஆண்டிற்கு பின்னர் 53Kg பிரிவு போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
Image Source: instagram-com
2022 Belgrade உலக சாம்பியன்ஷிப், 2022 Birmingham காமன்வெல்த் போட்டிகளிலும் 53Kg பிரிவில் விளையாடிய வினேசு போகத், பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் 53Kg பிரிவில் விளையாட விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
Image Source: instagram-com/vineshphogat
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 53Kg பிரிவில் விளையாட விரும்பிய வினேசு போகட்டை 50Kg பிரிவு போட்டிக்கில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Image Source: instagram-com/vineshphogat
இந்தியாவின் வளர்ந்து வரும் மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கால், 2023-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 53Kg பிரிவின் கோட்டாவை பிடித்தார். இதன் காரணமாக வினேசு 50Kg (அ) 57Kg பிரிவில் விளையாட அனுமதிக்கப்பட்டார்!
Image Source: instagram-com/vineshphogat
முன்னதாக மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன்-க்கு எதிரான போராட்டங்கள் மற்றும் முழங்கால் தசைநார் காயம் காரணமாக மல்யுத்த போட்டிகளில் இருந்து வினேசு சிறிது காலம் விலகி இருக்க, இந்த இடைவெளியில் ஆன்டிம் பங்கால்; 53Kg பிரிவில் தனது இடத்தை உறுதி செய்தார்!
Image Source: instagram-com/vineshphogat
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 50Kg பிரிவில் விளையாட முடிவு செய்த வினேசு போகாட், 52 கிலோவாக இருந்த தனது எடையை கடுமையான முயற்சிக்கு பின்னர் 49.90 கிலோவாக குறைத்தார். பாரிஸ் ஒலிம்பிக்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் அவரது எடை 49.90 மட்டுமே!
Image Source: instagram-com/vineshphogat
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஒரே நாளில் மூன்று போட்டிகளை சந்தித்த வினேசு போகாத், ஆற்றல் இழப்பை சமாளிக்க போட்டிகளுக்கு இடையில் போதுமான அளவு திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இது அவரின் எடையே மீண்டும் 52.7 கிலோவுக்கு கொண்டு சென்றது!
Image Source: instagram-com/vineshphogat
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டிகளில் இறுதி போட்டிக்கு முன்னேறிய போகாட், இறுதி போட்டிக்கு முன்னதாக இந்த 2.7Kg (கூடுதல்) எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவரால் 50.1 Kg வரை மட்டுமே எடையை குறைக்க முடிந்தது!
Image Source: instagram-com/vineshphogat
Thanks For Reading!