[ad_1] PCOS பிரச்சனை உள்ள பெண்களுக்கு புரதம் தரும் நன்மைகள்!

Aug 20, 2024

PCOS பிரச்சனை உள்ள பெண்களுக்கு புரதம் தரும் நன்மைகள்!

mukesh M

PCOS உள்ளவர்களுக்கு புரதம்!

இளம்பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சனையாக PCOS பிரச்சனை பார்க்கப்படும் நிலையில், இப்பிரச்சனை உள்ள பெண்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பெறும் நன்மை - தீமைகள் என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: istock

நீரிழிவு கட்டுப்பாடு!

PCOS பிரச்சனை ஆனது இன்சுலின் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்து வகை-2 நீரிழவு அபாயத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புரதம் நிறைந்து உணவுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, PCOS பிரச்சனை உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் நீரிழிவை தடுக்கிறது!

Image Source: istock

உடல் எடை மேலாண்மை!

PCOS பிரச்சனையால் உண்டாகும் ஹார்மோன் சமநிலையின்மை ஆனது பெண்களின் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் நிலையில், புரதம் நிறைந்த உணவுகளின் நுகர்வு இந்த எடை அதிகரிப்பு பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது!

Image Source: pexels-com

சரும தளர்வுகளை தடுக்கும்!

தசைகளின் அடர்த்தியை குறைத்து, தளர்வுக்கு வழிவகுக்கும் பண்பு PCOS பிரச்சனையுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில், புரதம் நிறைந்த உணவுகள் திசுக்களின் மீள் உருவாக்கத்திற்கு உதவி இந்த தசைகள் தளர்வடையும் பிரச்சனையை சமாளிக்கிறது!

Image Source: istock

தேவையற்ற முடிகளை தடுக்கும்!

PCOS பிரச்சனை உண்டாக்கும் ஹார்மோன் சமநிலையின்மை ஆனது, பெண்கள் உடலில் தேவையற்ற முடிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதேநேரம் புரதம் நிறைந்த உணவுகளின் நுகர்வு, ஹார்மோன் சமநிலைக்கு உதவி இந்த முடிகளின் வளர்ச்சியை தடுக்கும்!

Image Source: istock

எலும்புகளின் வலிமைக்கு உதவும்!

PCOS பிரச்சனை உள்ள பெண்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படுவது இயல்பான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், புரதம் நிறைந்த உணவுகளின் நுகர்வு ஆனது கால்சியம் உறிஞ்சுதலை அதிகரித்து - எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது!

Image Source: istock

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!

PCOS பிரச்சனை உள்ள பெண்கள் தங்களின் விரல் நகங்கள், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தில் குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். புரதம் நிறைந்த உணவுகளின் நுகர்வு ஆனது, குறிப்பிட்ட இந்த பிரச்சனைகளை தடுத்து, தோற்றத்தை பாதுகாக்கிறது!

Image Source: istock

நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்!

PCOS பிரச்சனை உண்டாக்கும் இன்சுலின் தட்டுப்பாடு ஆனது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டுக்கு காரணமாகலாம். இந்நிலையில், புரதம் நிறைந்த உணவுகளின் நுகர்வு இந்த பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது!

Image Source: istock

பெண்களுக்கு அவசியமான புரத உணவுகள்!

புரதம் நிறைந்த உணவுகளில் கோழியிறைச்சி, சால்மன் மீன், கிரீக் யோகர்ட், குயினோ, மசூர் பருப்பு, முட்டைகள் போன்றவற்றை போதுமான எளவு எடுத்துக்கொள்ளலாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: முயன்றால் எந்த வயதிலும் முடியாதவை ஒன்றுமில்லை

[ad_2]