[ad_1] Single என கூறி ஏமாற்றும் உங்கள் நண்பரை கண்டறிய உதவும் அறிகுறிகள்!

Single என கூறி ஏமாற்றும் உங்கள் நண்பரை கண்டறிய உதவும் அறிகுறிகள்!

Jul 5, 2024

By: mukesh M

உங்கள் நண்பர் உண்மையில் Single-ஆ?

Single என கூறி ஊரை ஏமாற்றிவிட்டு, காதலிக்கும் (அ) டேட்டிங் செல்லும் உங்கள் நண்பரிடன் காணப்படும் மாற்றங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? என்பது குறித்து விரவாக இங்கு நாம் காணலாம்!

Image Source: unsplash-com

மறைக்க துவங்குவார்கள்!

இதுநாள் வரை உங்களுடன் வெளிப்படையாக நடந்துக்கொண்ட உங்கள் நண்பர், டேட்டிங் செல்ல துவங்கியதும் பல்வேறு விஷயங்களை உங்களிடம் இருந்து மறைக்க துவங்குவார்கள். குறிப்பாக கைப்பேசியை மறைப்பார்கள்!

Image Source: unsplash-com

கைப்பேசியில் மூழ்கி இருப்பார்கள்!

தனிமையில் அதிகம் நேரம் செலவிடுவதோடு, அருகில் என்ன நடக்கிறது என்று கூட கவனிக்காமல் கைப்பேசியில் முழுமையாக மூழ்கிவிடுவார்கள். மேலும், இதன் போது தனக்கு தானே சிரித்துக் கொள்ளவும் செய்வார்கள்!

Image Source: pexels-com

அடிக்கடி வெளியே செல்வார்கள்!

உங்களுக்கு தெரியாமல் அடிக்கடி வெளியே செல்வதற்கான திட்டத்தை தீட்டுவார்கள். உங்களுக்கு மட்டும் அல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கூட இந்த விஷயங்களை இவர்கள் பகிர்ந்துக்கொள்வது இல்லை!

Image Source: unsplash-com

உறுதியாக இருப்பார்கள்!

உண்மையை மனதிற்குள் வைத்து மறைக்கும் நபர்களிடம் காணப்படும் உறுதிப்பாட்டை மற்றவர்களிடம் நம்மால் காண முடியாது. அந்த வகையில் சிங்கிள் என கூறி ஏமாற்றும் உங்கள் நண்பரிடம் தான் அப்படி ஒரு உறுதியை நீங்கள் காண முடியும்!

Image Source: unsplash-com

பணம் கேட்பார்கள்!

ரகசியமான காதல் உறவில் இருக்கும் நண்பர்கள் உங்களிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், இந்த பணத்திற்கான தேவைகள் குறித்தும் இவர்கள் பகிர்ந்துக்கொள்வது இல்லை!

Image Source: unsplash-com

உடல் தோற்றத்தில் அக்கறை அதிகரிக்கும்!

சிகை அலங்காரம், உடல் அலங்காரம், ஆடை அலங்காரம் என்ன தன்னை நாள் ஒரு வண்ணமாக மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களை காட்டிலும் தன்னை அதிகம் கவர்ச்சியாக காண்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள்!

Image Source: unsplash-com

தனிமையை விரும்புவார்கள்!

பெரும்பாலும் நண்பர் கூட்டத்திடம் இருந்து விலகி, தனிமையில் அதிக நேரத்தை செலவிட முயற்சிப்பார்கள். நண்பர்கள் உடன் இருக்கும் போதும், தனிமையில் அமர்ந்து, தங்கள் தனிப்பட்ட உலகை ரசிக்க முயற்சிப்பார்கள்!

Image Source: unsplash-com

அவகாசம் கேட்பார்கள்!

எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ஒப்புக்கொள்ளாமல், வேறு ஒருவரிடம் அனுமதி கோர வேண்டும் என்பது போல் அனைத்திற்கும் அவகாசம் கேட்டு, தங்கள் இரகசிய காதல் குறித்து சொல்லாமல் சொல்வார்கள்!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோனை குறைக்கும் உணவு பொருட்கள்!

[ad_2]