Apr 30, 2024
இந்த பழத்தின் தோல் பகுதி பாம்பின் செதில்கள் போல் காணப்படுவதால் இதை 'பாம்பு பழம்' என அழைக்கின்றனர். இதை சாலக் பழம் எனவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/mdanumurthi
சாலக் பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
Image Source: instagram-com/cured-catering
சாலக் பழத்தில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், கண் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள தீர்வாகும். இதை தொடர்ச்சயாக சாப்பிட்டு வந்தால், பார்வை திறன் குறையும் அபாயம் முற்றிலும் நீங்கக்கூடும்
Image Source: istock
இதில் நார்ச்சத்து இருப்பதால், செரிமான கோளாறுகளை போக்க செய்கிறது. குறிப்பாக, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுப்பதோடு உடலின் ஜீரண சக்தியும் மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
இப்பழத்தில் பெக்டின் மற்றும் பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால், memory fruit என மக்கள் அழைத்து வருகின்றனர். அதன் வழக்கமான நுகர்வு அறிவாற்றல் திறனை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடும்
Image Source: istock
பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய மினரல்கள் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிதும் உதவியாக இருக்கின்றன
Image Source: istock
சாலக் பழத்தின் வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவை, உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் செல் மற்றும் திசுக்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது
Image Source: istock
இதன் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் காரணமாக, உடல் எடை இழப்புக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. நீண்ட நேரத்திற்கு வயிறு முழுமையான உணர்வை அளிப்பதோடு நிலையான ஆற்றல் அளவையும் தரக்கூடும்
Image Source: istock
இந்த பழம் இனிப்பும் லேசான கசப்பு சுவையும் கொண்டிருக்கும். பழத்தின் தோலை உரித்து அப்படியே சாப்பிட செய்யலாம். இப்பழம் இந்தோனேஷியா மட்டுமின்றி தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் அதிகமாக கிடைக்கிறது
Image Source: instagram-com/nyoman-kelvin
Thanks For Reading!