Aug 14, 2024
நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் பல நிறைந்து காணப்படும் Sweet Corn-னை தொடர்ச்சியாக உட்கொள்வதால் கிடைக்கும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாக Sweet Corn உள்ளது. அந்த வகையில் இந்த Sweet Corn-ன் நுகர்வு ஆனது சீரான செரிமான செயல்பாட்டை உறுதி செய்வதோடு மலச்சிக்கல் - அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் தடுக்கிறது!
Image Source: istock
Sweet Corn-ல் லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து நம் கண்களை பாதுகாக்கிறது. மேலும், கண்புரை - மாகுலர் சிதைவு போன்ற அபாயங்களையும் தடுக்கிறது!
Image Source: istock
Sweet Corn-ல் இயற்கை சர்க்கரை காணப்படும் நிலையிலும் குறைந்தளவு கொழுப்பு மற்றும் கலோரிகளையே கொண்டுள்ளது. அந்த வகையில் இதன் நுகர்வு ஆனது ஆரோக்கிய உடல் எடை மேலாண்மைக்கு உதவி செய்கிறது!
Image Source: pexels-com
கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரமாக இருக்கும் இந்த Sweet Corn நுகர்வு ஆனது ஆற்றல் இழப்பை தடுப்பதோடு, நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலையும் அளித்து புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கிறது!
Image Source: istock
Sweet Corn-ல் காணப்படும் போதுமான அளவு வைட்டமின் சி, சரும செல்களின் சேதத்தை தடுக்கிறது. கூடுதலாக இதில் காணப்படும் பீட்டா கரோட்டின் சரும செல்களின் மீள் உருவாக்கத்திற்கு உதவி சரும ஆரோக்கியத்தை காக்கிறது!
Image Source: istock
Sweet Corn-ல் காணப்படும் பொட்டாசியம், இரத்த நாளங்களில் தளர்வுக்கு உதவி சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, இதய ஆரோக்கியம் பாதுகாக்கிறது.
Image Source: istock
பொட்டாசியம் நிறைந்த இந்த Sweet Corn ஆனது, சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இரத்த அழுத்தம் உண்டாவதன் வாய்ப்பையும் இது குறைக்கிறது.
Image Source: istock
Sweet Corn-ன் அளவான நுகர்வு ஆரோக்கிய நன்மைகள் பல அளிக்கும் நிலையில், இதன் அதிகப்படியான நுகர்வு நீரிழிவு, குடல் - நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றை உண்டாக்கலாம். எனவே, நிபுணர் வழிகாட்டுதல் படி அளவாக உட்கொள்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!