Jun 25, 2024
சர்வதேச டி20 போட்டிகளில் சிக்ஸர் அதிகம் அடித்த வீரர் யார்? இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்ழ என்பது குறித்து இங்கு காணலாம். (ஜூன் 24, 2024 வரையிலான தகவல்கள் அடிப்படையில்)
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா மொத்தம் 149 இன்னிங்ஸ் விளையாடி 203 சிக்ஸர்களை அடித்து இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
Image Source: twitter-com
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்டின் குப்டில் மொத்தம் 118 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 173 சிக்ஸர்கள் அடித்து குவித்துள்ளார்.
Image Source: twitter-com
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மொத்தம் 113 இன்னிங்ஸில் 137 சிக்ஸர்களை அடித்து குவித்துள்ளார்.
Image Source: twitter-com
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல், மொத்தம் 104 இன்னிங்ஸில் விளையாடி 134 சிக்ஸர்களை அடித்து குவித்துள்ளார்!
Image Source: twitter-com
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன், மொத்தம் 87 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 132 சிக்ஸர்களை அடித்து விளாசியுள்ளார்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சூர்ய குமார் யாதவ், வெறும் 63 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி மொத்தமாக 131 சிக்ஸர்களை அடித்து விளாசியுள்ளார்.
Image Source: instagram-com
ஐயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் -ரவுண்டர் பால் ஸ்டிரிலிங் மொத்தம் 144 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 128 சிக்ஸர்களை குவித்து இப்பட்டியலில் 7-ஆம் இடம் பிடிக்கின்றார்.
Image Source: twitter-com
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரோன் பின்ச், மொத்தம் 103 இன்னிங்ஸில் விளையாடி 125 சிக்ஸர்களை அடித்து குவித்துள்ளார்.
Image Source: twitter-com
Thanks For Reading!