Jun 11, 2024
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா இதுவரை குவித்த குறைந்த பட்ச ரன் எது? எந்த அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரன்களை குவித்தது? என்பது குறித்து விரிவாக இங்கு காணலாம்!
Image Source: twitter-com
மார்ச் 2016-ல் நாக்பூரில் நடைப்பெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 126/7 ரன்கள் குவிக்க, இந்தியா 79 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆகி தோல்வியை தழுவியது!
Image Source: twitter-com
அக்டோபர் 2021-ல் துபாயில் நடைப்பெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய இந்தியா 110/7 ரன்கள் குவிக்க, பின் களமிறங்கிய நியூசிலாந்து 14.3 ஓவரில் 111/2 ரன் குவித்து இந்தியாவை வீழ்த்தியது.
Image Source: twitter-com
ஜூன் 2009-ல் நாத்திங்காமில் நடைப்பெற்ற டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது இந்தியா. முதலில் களமிறங்கிய 130/5 ரன்கள் குவித்தது; இரண்டாவதாக களமிறங்கிய இந்தியா 118/8 மட்டுமே குவித்து தோல்வி்யை தழுவியது.
Image Source: twitter-com
ஜூன் 2024-ல் நியூயார்கில் நடைப்பெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் 113/7 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது!
Image Source: twitter-com
செப்டம்பர் 2012-ல் கொழும்புவில் நடைப்பெற்ற டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 17 ஓவர்கள் முடிவில் 129/2 ரன்கள் குவித்து, வெற்றியை தனதாக்கியது!
Image Source: twitter-com
மார்ச் 2014; மிர்பூரில் நடைப்பெற்ற டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 129/7 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 130/3 ரன் குவித்து வெற்றியை தனதாக்கியது.
Image Source: twitter-com
ஏப்ரல் 2014-ல் மிர்பூரில் நடைப்பெற்ற டி20 போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்தியா 130/4 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக களமிறங்கிய இலங்கை 17.5 ஓவரில் 134/4 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
Image Source: twitter-com
அக்டோபர் 2022; பெர்த்தில் நடைப்பெற்ற டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்த்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 137/5 ரன்கள் குவித்தது; இரண்டாவதாக களமிறங்கிய இந்தியா 133/9 மட்டுமே குவித்து தோல்வி்யை தழுவியது.
Image Source: twitter-com
Thanks For Reading!