Jul 11, 2024
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 150 வெற்றிகளை பதிவு செய்து, T20 வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ள நிலையில், இந்த பட்டியலில் இடம் பிடித்த மற்ற அணிகள் குறித்து இங்கு காணலாம்! (தகவல்கள் ஜூலை 10, 2024 வரையில்).
Image Source: twitter-com
இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 230 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 150 வெற்றி, 69 தோல்விகள், 5 டை மற்றும் 6 முடிவின்மையை சந்தித்துள்ளது!
Image Source: twitter-com
டி20 போட்டிகளை பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் பாகிஸ்தான், இதுவரை 245 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 142 வெற்றிகளை பதிவு செய்து இப்பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறது!
Image Source: twitter-com
2005-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது டி20 பயணத்தை துவங்கிய நியூசிலாந்து அணி, இதுவரையில் 220 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 111 வெற்றி, 92 தோல்வி, 10 டை மற்றும் 7 முடிவின்மையை சந்தித்துள்ளது.
Image Source: twitter-com
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி டி20 போட்டிகளை பொறுத்த வரையில், மொத்தம் 195 போட்டிகளில் விளையாடி அதில் 105 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
Image Source: twitter-com
2005-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியை விளையாடிய தென்னாப்பிரிக்கா மொத்தம் 185 போட்டிகளில் விளையாடி 104 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
Image Source: twitter-com
இரண்டு முறை டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி இதுவரை 192 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 வெற்றிகளை பதிவு செய்து இப்பட்டியலில் 6-ஆம் இடம் பிடித்துள்ளது.
Image Source: twitter-com
2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 202 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 88 வெற்றி, 101 தோல்வி, 3 டை மற்றும் 10 முடிவின்மையை சந்தித்துள்ளது.
Image Source: twitter-com
கடந்த 2006-ஆம் ஆண்டு தனது டி20 பயணத்தை தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி மொத்தம் 192 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 86 வெற்றி, 100-ல் தோல்வி, 4 டை மற்றும் 2 முடிவின்மையை சந்தித்துள்ளது.
Image Source: twitter-com
Thanks For Reading!