May 30, 2024
2007-ஆம் ஆண்டு துவங்கி 2002-ஆம் வரை என இதுவரை நடைப்பெற்ற WC T20 தொடர்களில் தொடர் வாரியாக ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
2007-ஆம் நடைப்பெற்ற உலக கோப்பை டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை பாக்கிஸ்தான் வீரர் அப்ரிடி தட்டி சென்றார். இத்தொடரில் இவர் 12 விக்கெட்டுகளையும், 91 ரன்களையும் குவித்திருந்தார்!
Image Source: instagram-com
2009-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர் திலகரத்ன தில்ஷான் தொடர் நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் இவர் 317 ரன்கள் குவித்து, தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்!
Image Source: instagram-com
2010-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் கெவின் பீட்டர்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் இவர் 248 ரன்களை குவித்தார். இதில் 2 அரை சதங்கள் அடக்கம்.
Image Source: instagram-com
2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 249 ரன்கள் குவித்து ‘தொடரில் அதிக ரன் குவித்த வீரர்’ என்ற பெருமை பெற்றார்!
Image Source: instagram-com
2014-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் 319 ரன்கள் குவித்து, தொடரில் அதிக ரன் குவித்த வீரர் எனும் பெறுமை பெற்ற விராட் கோலி, தொடர் நாயகன் விருதையும் பெற்று சென்றார்!
Image Source: instagram-com
2014-ஆம் ஆண்டை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டிலும் விராட் கோலி இரண்டாவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருது பெற்ற வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
Image Source: instagram-com
2021-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் வார்னர் 289 ரன்களை குவித்தார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும்!
Image Source: instagram-com
2022-ஆம் நடைப்பெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் சாம் கரன் தொடர் நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் இவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது!
Image Source: pexels-com
Thanks For Reading!