Jun 28, 2024
T20 WC 2024 தொடரில் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், குறித்த இந்த தொடரில் ஜஸ்பரீத் பும்ரா, தனது அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: x-com/jaspritbumrah93
T20 WC 2024 தொடரில் பும்ராவின் பயனம் வங்கதேச அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் துவங்கியது. இந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய பும்ரா, வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷகிப் உல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை நிதானமாக துவங்கினார்.
Image Source: x-com/jaspritbumrah93
T20 WC 2024 தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கு ஐயர்லாந்து அணிக்கு எதிராக அமைந்தது. இந்த போட்டியில் இந்தியா, எதிர் அணியை வெறும் 96 ரன்களில் சுருட்டியது. இந்த போட்டியில் பும்ரா 3 ஓவர்களுக்கு 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
Image Source: x-com/jaspritbumrah93
அடுத்தப்படியாக தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு பும்ரா வீழ்த்திய 3 விக்கெட் பெரிதும் உதவியது!
Image Source: x-com/jaspritbumrah93
குழு பிரிவு போட்டிகளில் 3-வது ஆட்டத்தில் இந்தியா USA-வை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெறும் 110 ரன்களுக்கு USA சுருண்டது, இருப்பினும் இந்த போட்டியில் பும்ராவுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடுமையான போட்டியை உண்டாக்கினார்!
Image Source: x-com/jaspritbumrah93
சூப்பர் 8 பிரிவின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா 134 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை ஆல் -அவுட் ஆக்கியது. இப்போட்டியில் பும்ரா, மொத்தம் 4 ஓவர்கள் வீசி வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்!
Image Source: x-com/jaspritbumrah93
சூப்பர் 8 பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் இந்தியா மீண்டும் வங்க தேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பூம்ரா 4 ஓவர்களுக்கு வெறும் 13 ரன்களை மட்டுமே அளித்தார். அதோடு, 2 விக்கெட்டுகளையும் குவித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
Image Source: x-com/jaspritbumrah93
சூப்பர் 8 பிரிவில் 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்ட இந்தியா, சற்று தொய்வான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் பும்ரா, தான் வீசிய 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே அளித்து, தன் பங்குக்கு ஒரு விக்கெட்டை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Image Source: x-com/jaspritbumrah93
அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா, வாழ்வா - சாவா என்ற நிலையில் இருந்தது. இந்த போட்டியில் 2.4 ஓவர்கள் வீசிய பும்ரா 12 ரன்களை மட்டுமே அளித்தார். மேலும், முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இறுதி போட்டிக்கான பாதையை அமைத்து கொடுத்தார்!
Image Source: x-com/jaspritbumrah93
Thanks For Reading!