Jul 31, 2024
Tattoo குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மைகள் ஒரு சிலவற்றில் பாக்டீரியா காணப்படுவதாகவும், Tattoo-வுக்கு இந்த மை பயன்படுத்த ஆபத்து பல எழுவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: istock
சருமத்தை லட்சத்திற்கு மேற்பட்ட முறை சிதைக்கும் இந்த Tattoo முறையில் கிருமி தொற்றிக்கான வாய்ப்பு இருப்பதுடம், சரும அலர்ஜி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளும் உண்டாகிறது. தகவல்கள் படி Tattoo குத்திக்கொள்ளும் நபர்களின் 2.1% நபருக்கு இந்த பிரச்சனை உள்ளது.
Image Source: pexels-com
சருமத்தின் வகை மற்றும் நிலை பொறுத்து இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடுகிறது. Tattoo-வுக்கு அருகில் உள்ள சரும பகுதியில் ஒவ்வாமை, எரிச்சல், சருமம் உரிதல், வீக்கம் போன்றவை பொதுவான சில அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
Image Source: istock
பொதுவான சில அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல், உடல் வலி, சரும வீக்கங்கள், வலி தரும் கொப்புளங்கள் போன்றவையும் இந்த கிருமி தொற்றால் ஏற்படக் கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
Tattoo குத்த பயன்படுத்தும் மை மூலம் இந்த கிருமி தொற்று உண்டாகலாம். மையை தவிர்த்து, Tattoo-வுக்கு பயன்படுத்தும் (அசுத்தமான) இயந்திரம், ஊசி போன்றவற்றின் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது.
Image Source: istock
Tattoo-வுக்கு பயன்படுத்தும் மை பாட்டில்கள் பல முறை பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த மைகள் பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகம். எனவே, இந்த மை அசுத்தமடைந்து, கிருமிகளை கடத்தும் வாய்ப்பு அதிகம் என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது!
Image Source: istock
குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபரையே இந்த கிருமி தொற்று குறி வைத்து தாக்குகிறது. மேலும், சிறிய Tattoo குத்திக்கொள்ளும் நபர்களை காட்டிலும், பெரிய Tattoo குத்திக்கொள்ளும் நபர்களையே இது அதிகம் பாதிக்கிறது.
Image Source: istock
Tattoo வழியே பரவும் கிருமி தொற்றை தவிர்க்க, சுத்தம் மட்டுமே உதவும். அதாவது, Tattoo-வுக்கு தேர்வு செய்யும் இடம், பொருட்கள் மற்றும் நபரின் சுகாதாரத்தை பரிசோதித்து பின் Tattoo செய்துக்கொள்ளுங்கள்!
Image Source: istock
Tattoo-வுக்கு பின் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை கண்டால் - கிருமி தொற்றின் அறிகுறிகளை கண்டால் - உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்து சிகிச்சை பெறுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!