[ad_1] UAE கிரிக்கெட் அணிக்காக விளையாடும் இந்தியர் - ஈஷா ஓசா!

UAE கிரிக்கெட் அணிக்காக விளையாடும் இந்தியர் - ஈஷா ஓசா!

mukesh M, Samayam Tamil

Jul 24, 2024

ஈஷா ரோகித் ஓசா!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் UAE அணியை வழிநடத்தும் வீராங்கனை ஈஷா ஓசா. இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையான இவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com/eshaoza1998

இந்தியாவில் பிறந்தவர்!

இந்தியாவில் பிறந்தவர்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் UAE மகளிர் அணியை வழிநடத்தும் ஈஷா, இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர். ஜனவரி 8, 1998-ஆம் ஆண்டு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தம்பதிக்கு மகளாக பிறந்தார்!

Image Source: instagram-com/eshaoza1998

UAE சென்றது எப்போது?

ஈஷா ஓசா 8 மாத குழந்தையாக இருக்கும் போது அவரது பெற்றோர்கள் UAE-க்கு குடிப்பெயர்ந்தனர். பின், அந்நாட்டில் குடியுரிமை பெற்றனர். இதன் காரணமாக ஈஷா, UAE நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றார்!

Image Source: instagram-com/eshaoza1998

இந்தியாவிற்கும் விளையாடியுள்ளார்!

சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த ஈஷா, 2017-18 இடைப்பட்ட காலத்தில் UAE உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வந்தார். பின் 2019-ஆம் இந்தியாவின் உள்நாட்டு அணியான மும்பை மகளிர் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடினார்.

Image Source: instagram-com/eshaoza1998

முதல் உலக கோப்பை அனுபவம்!

2018-ஆம் ஆண்டு UAE மகளிர் அணிக்காக உலக கோப்பை தகுதி போட்களில் பங்கேற்கும் வாய்ப்பு ஈஷாவுக்கு கிடைத்த்து. இந்த தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்தடுத்த படிகளை கடந்து சென்றார்!

Image Source: instagram-com/eshaoza1998

அதிவேக 1000 ரன்கள்!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்தோர் பட்டியலில் ஈஷா இரண்டாம் இடத்தில் உள்ளார். 31 இன்னிங்ஸில் இவர் செய்த இந்த சாதனையை, தன்சானியா அணியின் பத்துமா கிப்பாசு 30 இன்னிங்ஸில் முறியடித்து முதல் இடத்தில் உள்ளார்.

Image Source: instagram-com/eshaoza1998

டி20 போட்டிகளில் 3 சதம்!

சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதம் அடித்த மூன்று வீராங்கனைகளில் ஒருவராக ஈஷா ஓசா உள்ளார். இலங்கை அணியின் சமாரி அத்தப்பத்து மற்றும் தன்சானியா அணியின் பத்துமா கிப்பாசு ஆகியோர் இச்சாதனையை படைத்த மற்ற இரண்டு நபர்கள் ஆவர்!

Image Source: instagram-com/eshaoza1998

டக் அவுட் ஆனதில்லை!

ஜூலை 7, 2018 அன்று தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஈஷா, இதுவரை 82 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு முறை கூட இவர் டக் அவுட் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com/eshaoza1998

பேட்டிங்-க்கு இணையாக பந்துவீச்சு!

பேட்டிங்-க்கு இணையாக பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர், இதுவரை 64 சர்வதேச டி20 இன்னிங்ஸில் பந்துவீசியுள்ளார். இதன் வழியே 56 விக்கெட்களை வீழ்த்தி, சிறந்த ஒரு ஆல்-ரவுண்டராக திகழ்கிறார்!

Image Source: instagram-com/eshaoza1998

Thanks For Reading!

Next: இளம் வயதில் ‘ஒலிம்பிக் பதக்கம்’ வென்ற இந்தியர்கள்!

[ad_2]