May 1, 2024
உடல் எடை மேலாண்மை சார்ந்த உடற்பயிற்சியில் Walking மற்றும் Jogging இரண்டிற்கும் மிக முக்கிய பங்கு இருக்கும் நிலையில், இவை இரண்டில் எது சிறந்தது? எப்படி முறையாக செய்வது? என இங்கு நாம் காணலாம்.
Image Source: pexels-com
Walking என்பது அடிப்படையில் நடைப்பயிற்சி ஆகும். அதாவது, நடந்து செல்வதன் மூலம் உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சி ஆகும். அதேநேரம் jogging எனப்படுவது, மிதமான வேகத்தில் ஓடும் ஒரு வகை உடற்பயிற்சி ஆகும்.
Image Source: istock
Walking மற்றும் Jogging, இரண்டும் ஏரோபிக் வகை உடற்பயிற்சியின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இவை இரண்டும் எடை மேலாண்மைக்கு உதவும் (தனித்துவமான) பண்புகளை கொண்டுள்ளன.
Image Source: istock
Walking மற்றும் Jogging, இரண்டும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில் சுவாச பிரச்சனைகளை தடுத்து இதய ஆரோக்கியம் காக்கும் தன்மையையும் இவை கொண்டள்ளன.
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இவை இரண்டும் மிதமான அளவில் ஒப்பான பலன்களை அளிக்கின்றன. அதேநேரம், அடுத்த நிலை பயிற்சியின் போது Walking காட்டிலும் Jogging பலன்களை அதிகம் அளிக்கிறது.
Image Source: istock
Walking உடன் ஒப்பிடுகையில் Jogging கூடுதல் கலோரிகளை எரிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் உடல் எடை கட்டுப்பாட்டிலும், Walking விட Jogging நல்ல பலன் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
Walking மற்றும் Jogging என இரண்டு பயிற்சிகளின் போதும் பாதங்களில் உஃண்டாகும் அழுத்தம் ஆனது, உடலில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இரத்த அழுத்த பிரச்சனைகளை இது தடுக்கிறது.
Image Source: istock
அதேநேரம் இந்த இரு பயிற்சிகளின் பின் விளைவாகவும் மூட்டுகளில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம். குறிப்பாக Jogging செய்யும் வழக்கம் கொண்டுள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம் இருக்கலாம்.
Image Source: istock
Walking மற்றும் Jogging, என இரண்டும் சுவாச மண்டலம் உள்ளிட்ட உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவும் நிலையிலும், சுவாச பிரச்சனை உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த பயிற்சிகளை நிபுணர் வழிகாட்டுதல் படி செய்வது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!