Jul 22, 2024
நடைப்பெற்று வரும் Women's Asia Cup 2024 தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் குறித்தும் - அணியின் கேப்டன்கள் குறித்தும் சற்று விரிவாக இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டர். Women's Asia Cup 2024 தொடரில் தனது அணியை வழிநடத்தும் இவர் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் வடித்த வங்கதேச வீராங்கனை என்ற பெருமை பெற்றவர்!
Image Source: twitter-com
Women's Asia Cup தொடர்களில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் உள்ளார். இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த குறிப்பிடத்தக்க ஆல்-ரவுண்டர் இந்த ஹர்மன்பிரீத் கவுர்!
Image Source: twitter-com
தற்போது நடைப்பெற்று வரும் Women's Asia Cup 2024 தொடரில் மலேசிய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்துபவர் வினிஃப்ரெட் துரைசிங்கம். தொடக்க ஆட்டக்காரரான இவர் மலேசியா அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி சுமார் 1049 ரன்கள் குவித்துள்ளார்!
Image Source: twitter-com
மகளிர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமீப காலமாக இணையத்தில் தேடி வந்த பெயர் இந்து பர்மா. நேபாளம் நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் இவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார்.
Image Source: twitter-com
Women's Asia Cup 2024 தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் வீராங்கனை நிடா ரஷித் தார். ஓர் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர், பல முறை பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
Image Source: twitter-com
சர்வதேச டி20 போடிட்களில் 3 சதங்களை அடித்த வீராங்கனை சமாரி அத்தப்பத்து. இலங்கை மகளிர் அணியை Women's Asia Cup 2024 தொடரில் வழிநடத்தும் இவர், ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார்.
Image Source: twitter-com
Women's Asia Cup 2024 தொடரில் தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் வீராங்கனை திப்பாச்சா புத்துவாங்க். இத்தொடரில் இடம்பெற்ற ஒரே பந்துவீச்சாளர் கேப்டன்!
Image Source: twitter-com
Women's Asia Cup 2024 தொடரில் UAE அணியை வழிநடத்தும் ஈஷா ரோகித், இந்தியாவின் மும்பையில் பிறந்தவர். தற்போது UAE மகளிர் அணியின் கேப்டனாக இருக்கும் இவர் சர்வதேச டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகாத ஒரு வீராங்கனை ஆவார்!
Image Source: twitter-com
Thanks For Reading!